கம்பராமாயணம் 8604 · யுத்த 21.117

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக - மதம் பொருந்திய யானையின் நெடிய மத்தகம் பிளவுபட்டுச் சிந்த; மணிமேல் முத்தின் பொலி முழுமேனியன் - மணியின் மேல் முத்துக்கள் பொலிந்து விளங்கினாற் போன்ற முழுவுடம்பினை உடையவனும்; முகில்விண் தொடு மெய்யன் - மேகம் தவழும் ஆகாயத்தைத் தொடுகின்ற உடம்பினை உடையவனுமாகிய அனுமன்; ஒத்தக் கடையுகம் உற்றுழி - (எல்லாப் பொருளும்) ஒருசேர அழியும் அந்த ஊழிக் காலம் வந்தபோது; உறுகால் பொர, உடுமீன் - பெருங்காற்று மோத உடுவாகிய விண்மீன்கள்; தொத்தப் பொலி, வெயில் சுற்றியது கனகக் கிரி ஒத்தான் - தொத்தி நிற்க விளங்குவதும் கதிரவனால் சூழப் பெறுவதும் ஆகிய பொன் மயமான மேருமலையை ஒத்துத் தோன்றினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the long temples of rutting elephants split and spilled their contents on the ground,
  2. his whole body glittered with pearls, he whose frame touched the cloud-filled sky;
  3. he was like the golden mountain when the last age comes and the great wind strikes,
  4. with clusters of stars clinging to it, and the sun's rays ringing it round.

What the poem says

As Aṉumaṉ smashes the elephants' heads, pearls spill out and cover his body. Poets held that pearls form inside the temples of great elephants.

His towering body covered in pearls is compared to Mēru, the golden mountain, at the end of an age. The world-ending wind has thrown the stars against it and they cling there, while the sun blazes around it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mattak kari neṭu mattakam vakirpaṭṭu uka, maṇmēl
muttiṉ poli muḻu mēṉiyaṉ, mukil viṇ toṭu meyyāṉ,
ottu ak kaṭaiyukam uṟṟuḻi, uṟu kāl pora, uṭu mīṉ
tottap poli kaṉakak kiri veyil cuṟṟiyatu ottāṉ.