கம்பராமாயணம் 8607 · யுத்த 21.120

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர்; சினவெம்
கார் ஏறினர், மலை ஏறினர்; கடல் ஏறினர்; பலவெம்
போரேறினர், புகழேறினர், புகுந்தார், புடை வளைந்தார்
நேரேறினர் விசும்பு ஏறிட, நெரித்தான், கதைதிரித்தான்.

பொருள் · Meaning in Tamil

தேர் ஏறினர் பரி ஏறினர் விடை ஏறினர் - தேரில் ஏறியவர்களும், குதிரைமீது ஏறியவர்களும், விடையேற்றினை ஒத்த (காலாட்படை) வீரர்களும், சினவெங்கார் ஏறினர் மழை ஏறினர் - வெகுளி மிக்க கொடிய மேகத்தை ஒத்த யானையின் மேல் ஏறியவர்களும் (அம்பு) மழையை மிகுதியாகப் பொழிகின்றவரும்; கலை ஏறினர், பலவெம் போர் ஏறினர் புகழ் ஏறினர் - போர்க்கலையில் வல்லவரும், பல கொடிய போர்களில் ஈடுபட்டு வெற்றிப் புகழ் கொண்டவரும் (ஆகிய அரக்கவீரர்கள்; புகுந்தார்புடை வளைத்தார் - (இப்போது போர்க்களத்திற்) புகுந்து (அனுமனைத் சுற்றி வளைத்துக் கொண்டனர்; நேர் ஏறினர் விசும்பு ஏறிட - (இங்ஙனம்) நேர்பட்டு வந்து வளைத்துக் கொண்டவர்கள் அனைவரும் விண்ணுலகிற் செல்லுமாறு; கதை திரித்தான் நெரித்தான் - (அனுமன்) தண்டாயுதத்தைச் சுழற்றியவனாய் (அவர்களை) நெரித்துக் கொன்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those mounted on chariots, those on horses, those like bulls; those on fierce, wrathful
  2. cloud-like elephants, those who poured down rain; those versed in war's art; those of many cruel
  3. battles, risen high in fame — they entered and closed round him on every side;
  4. so that all who met him face to face rose to heaven, he crushed them, whirling his mace.

What the poem says

Every kind of rākṣasa fighter closes in on Aṉumaṉ: chariot-warriors, cavalry, foot-soldiers strong as bulls, elephant-riders, archers whose arrows fall like rain, and famous veterans.

Each phrase of the Tamil repeats ēṟiṉar, 'those who mounted' or 'who rose', and the last line turns the word on them. They all 'rise to heaven' when Aṉumaṉ whirls his mace and crushes them, which means they die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr ēṟiṉar, pari ēṟiṉar, viṭai ēṟiṉar; ciṉa veṅ
kār ēṟiṉar, maḻai ēṟiṉar; kalai ēṟiṉar; pala vem
pōr ēṟiṉar, pukaḻ ēṟiṉar, pukuntār, puṭai vaḷaintār
nēr ēṟiṉar vicumpu ēṟiṭa, nerittāṉ, katai tirittāṉ.