கம்பராமாயணம் 8609 · யுத்த 21.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொகும்படை அரக்கர் வெள்ளம் - கூட்டமாக வந்து கூடிய சேனைகளாகிய அரக்கர் வெள்ளத்தை; துறை தொறும் அள்ளித் தூவி - (போர் முனைகளாகிய) துறைகள் தோறும் வாரி வீசி; நகம் படை ஆகக் கொல்லும் - (தன்னுடைய விரலின்) நகமே படைக் கலனாகக் கொன்று குவிக்கும்; நரசிங்கம் நடந்தது என்ன - நரசிங்கம் (ஆகிய திருமால் முன்னர்) நடந்தது போன்று; மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி - மிக்கு நிறைந்த அரக்கர் சேனையாகிய கடலினுள்ளே செல்லும் அனுமன்; தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் - தண்டாயுதத்தினால் அரக்கரை அரைக்கும் கையை உடையவனாக (ச்செல்லும் போது); வீர வாழ்க்கை அகம்பனைக்கிடைத்தான் - வீரத் திறத்துடன் வாழ்பவனாகிய அகம்பன் என்னும் அரக்கனை எதிர்ப்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scooping up the flood of massed rākṣasa troops at every front and scattering them,
- like the Man-Lion walking, who kills with his claws for weapons,
- Māruti, going through the swelling sea of troops, came upon Akampaṉ
- of heroic life — he whose hand ground the rākṣasas with his club.
What the poem says
Aṉumaṉ, called Māruti as son of the Wind, cuts his way through the enemy. He is compared to Narasiṃha, the Man-Lion form of Viṣṇu, who killed the demon Hiraṇyakaśipu with his claws.
In the middle of the slaughter he meets Akampaṉ, a famous rākṣasa champion. Their duel follows.