கம்பராமாயணம் 8610 · யுத்த 21.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான் - மலையினை ஒத்த பெரிய ஆயிரங் கழுதைகளால் (இழுக்கப் பெற்ற); மனத்தின் செல்லும் தலைத் தடந்தேரன், வில்லன் - மனத்தைக் காட்டிலும் விரைந்து செல்லும் தலைமை பெற்ற தேரினை உடையவனும், வில்லை ஏந்தியவனுமாகிய அகம்பன்; தாருகன் என்னும் தன்மைக் கொலைத்தொழில் அவுணன் - தாருகன் என்னும் பெயரைப் பெற்ற கொலைத் தொழிலையுடைய அவுணன்; சிலைத் தொழில் குமரன் கொல்ல - வில்லாற்றல் மிக்க முருகப் பெருமான் கொல்ல; தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் - முற்காலத்தில் போரில் உயிர் நீங்கியவனாய்; பின்னை, இராக்கத வேடம் கொண்டான் - பிற் காலத்தில் (அகம்பனென்னும்) இராக்கத வேடத்தைக் கொண்டு தோன்றியவனாவான்.
முற்காலத்தில் முருகப்பெருமானால் போரில் கொல்லப்பட்ட தாருகன் என்னும் அவுணனே இப்பொழுது அகம்பன் என்னும் அவுணனே இப்பொழுது அகம்பன் என்னும் அரக்கனாகத் தோன்றி நின்றான். தாருகன் - இப்பெயர் கொண்ட ஒருவன் அதிகாயனுக்குத் துணையாக வந்து இலக்குவனால் கொல்லப்பட்டான். (7846- 47) முருகப் பெருமானால் கொல்லப்பட்ட தாருகன் வரலாற்றைக் கந்தபுராணத்துள் காணலாம். பிறிதொரு தாருகன் காளியினால் கொல்லப்பட்டவன். “தாருகன் பேருரங்கிழித்த பெண்ணும் அல்லள்” (சிலம்பு 20: 39:40) என்பது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He had a mighty chariot drawn by asses huge as hills, five hundred twice over,
- a chief chariot that moved at the speed of thought; he was an archer;
- he was the murderous asura Tārukaṉ by nature, who later took a rākṣasa's form —
- he who perished in battle in days of old, when Kumaraṉ, master of the bow, slew him.
What the poem says
This verse introduces Akampaṉ. His great chariot is drawn by a thousand asses as big as hills and moves as fast as thought. In an earlier life he was the asura Tārukaṉ, whom Kumaraṉ (Murukaṉ, the war god) killed in battle. He has been reborn as a rākṣasa.
The commentary notes that the story of Murukaṉ killing Tārukaṉ is told in the Kanta Purāṇam. Other demons named Tārukaṉ also appear in Tamil literature, one killed by Kāḷī and one who fought beside Atikāyaṉ.