கம்பராமாயணம் 8611 · யுத்த 21.124

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாக சாதனனும் - பாகன் என்னும் அசுரனைக் கொன்ற இந்திரனும்; மற்றைப் பகை அடும் திகிரி பற்றும் ஏக சாதனனும் - ஏனைப் பகையினை அழிக்கும் தன்மையினை உடைய சக்கரப் படையினைக் கையிற்கொண்ட திருமாலும்; மூன்று புரமும் பண்டு எரித்துளோனும் போக - முப்புரங்களையும் முற்காலத்தே எரித்தழித்த சிவபெருமானும் தவிர; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே - ஏனைத் தேவர் முதலியவர்களில் ஒருவரேனும் இக்குரங்குடன் தனித்தப் போர் செய்யக் கற்றுள்ளார்களோ? (இல்லை) ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் - எனவே, கூற்றுவன் (போர்க்களத்தில் போர் செய்வோரது) உயிரைக் கவர்தல் என்பது (அனுமன் என்னும்) இக்குரங்கின் போர் வன்மையின் மேலதேயாகும் என்றான் (அகம்பன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Apart from Indra, slayer of Pākaṉ, and he who holds the discus that destroys other foes,
  2. the One Means, and he who long ago burned the three cities,
  3. has any one of the rest learned to fight against this monkey?
  4. So Death's feeding on lives rests on this one, more than on any," he said.

What the poem says

Akampaṉ speaks as he watches Aṉumaṉ fight. Only the greatest gods could stand against this monkey: Indra, Viṣṇu with his discus, and Śiva, who burned the three flying cities of the demons. No one else, he says, has learned how to fight him.

In the battle it is now Aṉumaṉ, more than Death himself, who is taking lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pākacātaṉaṉum, maṟṟaip pakai aṭun tikiri paṟṟum
ēka cātaṉaṉum, mūṉṟu puramum paṇṭu erittuḷōṉum
pōka, tām oruvar maṟṟu ik kuraṅkoṭu porak kaṟṟārē?
āka, kūṟṟu āvi uṇpatu itaṉiṉ mēṟṟu ākum 'eṉṟāṉ.