கம்பராமாயணம் 8612 · யுத்த 21.125

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யான் தடேன் என்னின் - யான் (இக்குரங்கினை) தடுக்காமல் விடுவேனாயின்; இவ் எழுதிரை வளாகம் என் ஆம் - ஏழு கடல்களால் சூழப்பட்ட இந்நிலவுலகம் என்ன ஆகும்? (அழிக்கப்பட்டு விடும்); வான்தடாது - வானுலகத் தேவரோ தடுக்க மாட்டார்கள்! அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் - (இக்குரங்கு) அரக்கர் என்ற பெயர்கூட இல்லாதபடி அழித்து விடும்; என்னா - என்று கூறியவனாய் (அகம்பன்), ஊன் தடா நின்றவாளி மழைதுரந்து - ஊனுடல் பெற்ற உயிர்களால் தடுக்க வியலாத (வன்மை வாய்ந்த) அம்பு மழையைப் பொழிந்து கொண்டு; உருத்துச் சென்றான் - கோபமுடையவனாய் (அனுமனை) நெருங்கிச் சென்றான்; மீன் தொடா நின்ற திண் தோள் - விண்மீன்களைத் தீண்டுமாறு உயர்ந்து நின்ற திண்ணிய தோள்களை உடைய; அனுமனும், விரைவின் வந்தான் - அனுமனும் (அவனை நோக்கி) விரைந்து எதிர்த்து வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If I do not stop him, what will become of this world ringed by seven seas?
  2. The heavens will not stop him; he will wipe out even the name of rākṣasas," saying this,
  3. he loosed a rain of arrows that no flesh could withstand, and advanced in rage;
  4. and Aṉumaṉ, whose strong shoulders reached the stars, came swiftly on.

What the poem says

Akampaṉ decides that he must stop Aṉumaṉ himself. If he does not, the monkey will wreck the whole earth and leave not even the name of the rākṣasa race, and the gods in heaven will certainly not stop him.

Akampaṉ advances shooting arrows, and Aṉumaṉ, towering to the sky, rushes to meet him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉ taṭēṉeṉṉiṉ, maṟṟu iv eḻu tirai vaḷākam eṉ ām?
vāṉ taṭātu; arakkar eṉṉum peyaraiyum māykkum 'eṉṉā
ūṉ taṭāniṉṟa vāḷi maḻai turantu uruttuc ceṉṟāṉ;
mīṉ toṭāniṉṟa tiṇ tōḷ aṉumaṉum viraiviṉ vantāṉ.