கம்பராமாயணம் 8613 · யுத்த 21.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற - தேருடன் யானைகளும் குதிரைகளும், அரக்கராகிய வீரர்களும் நெருங்கிச் செறிந்து உடன் வர; காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன - மேகத்துடன் நெருப்பும் காற்றும் பொங்கி எழுந்ததோர் ஊழிக்காலம் இது என்று சொல்லும்படி; வாரொடு தொடர்ந்த பைம்பொற் கழலினன் வருதலோடும் - வாரினாற் பிணிக்கப் பெற்ற பசிய பொன்னாலாகிய வீரக்கழலை அணிந்த அகம்பன் (எதிர்த்து) வந்தபோது; வயிரத்தோளான் - வயிரம் போலும் திண்ணிய தோள்களை உடைய அனுமன்; சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான் - கொடுந் தன்மையுடன் கூடிய தண்டாயுதத்தைச் சுழற்றி வீசினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As chariots, with elephants and horses and rākṣasas, pressed close and thronged,
- like the time when fire and wind rose up together with the clouds,
- as he came on, wearing the anklet of green gold bound with straps,
- the diamond-shouldered one whirled his club, joined with fury.
What the poem says
Akampaṉ charges with his chariots, elephants, horses and soldiers, and the commotion is like the end of the world, when clouds, fire and wind all rise together.
The man wearing the gold hero's anklet is Akampaṉ. The diamond-shouldered one is Aṉumaṉ, who answers by whirling his club.