கம்பராமாயணம் 8614 · யுத்த 21.127

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எற்றின, எறிந்த வல்லை ஏவின, எய்த, பெய்த - (அரக்கர்களால்) எறியப் பெற்றனவும் வீசப் பெற்றனவும், விரைந்து ஏவப் பெற்றனவும், எய்யப்பெற்றனவும், சொரியப் பெற்றனவுமாக; முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த - (தன்னை சூழ்ந்த படைக் கலங்கள் யாவும் முறை முறையே முறிபட்டுப் பொடியாய்ச் சிதறும்படியாக; சுற்றின வயிரத்தண்டால் அமரர் துள்ளத் துகைத்தனன் - (அனுமன் தான்) சுழற்றின திண்ணிய தண்டாயுதத்தால் தேவர்கள் (மகிழ்ந்து) துள்ளும்படி மோதி அழித்திட்டான்; கதையினால் வதையின் கல்வி கற்றிலன் அன்று கற்றான் - (இவ்வாறு) தண்டாயுதத்தால் (பகைவரைக்) கொல்லும் கல்வியை இதற்கு முன்பு முழுமையாகக் கல்லாதவனாகிய அனுமன் அகம்பனோடு பொருத அன்று முழுமையாகக் கற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those that were hurled, those flung, those swiftly loosed, those shot, those poured down —
  2. all the weapons that closed round him broke one after another and scattered,
  3. as he pounded with the diamond club he whirled, while the gods leapt for joy;
  4. he had not learned it before; that day he learned the art of killing with the mace.

What the poem says

The rākṣasas throw and shoot every kind of weapon at Aṉumaṉ, and he smashes them all to pieces with his club while the gods dance for joy.

The last line plays on learning: until this fight with Akampaṉ, Aṉumaṉ had not fully learned the art of killing with a club, and that day he mastered it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟṟiṉa, eṟinta, vallai ēviṉa, eyta, peyta,
muṟṟiṉa paṭaikaḷ yāvum, muṟai muṟai muṟintu cinta,
cuṟṟiṉa vayirat taṇṭāl tukaittaṉaṉ, amarar tuḷḷa;
kaṟṟilaṉ, aṉṟu kaṟṟāṉ, kataiyiṉāl vataiyiṉ kalvi.