கம்பராமாயணம் 8616 · யுத்த 21.129

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படுகளப் பரப்பை நோக்கி பாழிவாய் மடித்து, அவ் ஊழிச்
சுடுகனற் பொறிகள் வெங்கண் தோன்றிட, கொடித்தேர் தூண்டி,
விடுகனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின் ஆர்ப்பான்.

பொருள் · Meaning in Tamil

படுகளம் பரப்பை நோக்கி - போர்க்களப் பரப்பினைப் பார்த்து; பாழிவாய் அதுக்க - குகை போன்ற (தன்) வாயை அதுக்கியவனாய்; நூழில் சுடுகனற் பொறிகள் வெங்கண் தோன்றிட - (பகைவரைக்) கொன்று குவிக்கும் தொழிலிலே சுடுகின்ற தீப்பொறிகள் (தன்) கொடிய விழிகளில் காணப்பட; கொடித்தேர் தூண்டி விடுகனல் பகழி மாரி - கொடி கட்டிய தேரினைச் செலுத்தி விடுகின்ற கனல் கக்குகின்ற அம்புத் தொகுதி மழையை; மழையினும் மும்மை வீசி - மழையினைக் காட்டிலும் மும் மடங்கு அதிகமாக வீசிக்கொண்டு; முகிலின் ஆர்ப்பான் - மேகம் போன்று (இடிப்) பெருங்குரலில் ஆர்ப்பவனாய்; முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான் - விரைந்து சென்று குன்றினைப் போல (அனுமனைத்) தாக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking over the spread of the field of slaughter, pressing his cave-like mouth shut,
  2. burning sparks of slaughter showing in his fierce eyes, urging on his bannered chariot,
  3. hurling a downpour of fire-loosing arrows three times heavier than rain,
  4. he charged at speed and struck as at a hill, roaring like a cloud.

What the poem says

Seeing his army lying dead across the field, Akampaṉ bites his lips in fury and sparks fly from his eyes. He drives his chariot at Aṉumaṉ, shooting fiery arrows thicker than rain and roaring like thunder.

He attacks Aṉumaṉ as though charging at a mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭukaḷap parappai nōkki pāḻi vāy atukka, nūḻil
cuṭu kaṉaṟ poṟikaḷ veṅ kaṇ tōṉṟiṭa, koṭit tēr tūṇṭi,
viṭu kaṉal pakaḻi māri maḻaiyiṉum mummai vīci,
muṭukuṟac ceṉṟu, kuṉṟiṉ muṭṭiṉāṉ, mukiliṉ ārppāṉ.