கம்பராமாயணம் 8618 · யுத்த 21.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மார்பினும் தோளின் மேலும் - (தனது) மார்பு தோள் ஆகியவற்றின் மீதும்; வாளி வாய் மடுத்த வாயில் - அம்பு துளை செய்து சென்ற வாய்வழியாக; சோர்பெருங் குருதி சோரத் துளங்குவான் - வழிகின்ற பெரும் குருதி பெருகிய வண்ணமிருக்கச் சோர்வுற்றவனான அனுமன்; தேறா முன்னம் - (அந்நிலையினின்றும் தான்) தெளிவடைவதற்கு முன்னரே; தேர் இரண்டு அருகும் பூண்ட கழுதையும் அச்சும் சிந்த - தேரின் இரு பக்கத்தும் பூட்டப் பெற்ற கோவேறு கழுதையும் அச்சும் அழிந்து வீழவும்; சாரதி புரள வீரத்தண்டினால் கண்டம் செய்தான் - பாகன் புரண்டு தரையில் வீழவும், வீரத்தண்டாயுதத்தினால் துண்டு செய்தான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- On his chest and on his shoulders, through the openings where the arrows had sunk in,
- great streams of blood ran down; but before the shaken one had even recovered,
- the asses yoked on both sides of the chariot, and its axle, were scattered,
- the charioteer went rolling, as he smashed it to pieces with his heroic club.
What the poem says
Akampaṉ's arrows have gone deep into Aṉumaṉ's chest and shoulders, and blood is pouring out. He is shaken, but before he has even steadied himself he strikes back.
With one blow of his club he wrecks Akampaṉ's chariot. The asses that pulled it and its axle fly apart, and the charioteer is thrown to the ground.