கம்பராமாயணம் 8620 · யுத்த 21.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவன் தன்னை இன்று விண்ணொடு ஏற்றி - (அனுமனாகிய) இவனை இன்றைக்கே வானுலகில் ஏற்றி; வாள் இலங்கை வேந்தை வென்றியன் ஆக்கி - வாட்படையை உடைய இலங்கை மன்னனாகிய இராவணனை வெற்றி பெற்றவனாகச் செய்து; மற்றை மனிதரை வெறியர் ஆக்கி - ஏனை (இராம இலக்குவராகிய) மனிதர்களை (தோல்வியுடையவர்களாய் வெறுமை உடையவராகச் செய்து; அமரர்பால் நின்று உயர் நெடிய துன்பம் - தேவர்களிடத்து மேன்மேல் ஓங்கிய பெருந்துயரத்தை; நிறுப்பல் என்னா - நிலை பெறச் செய்வேன் என்று; அரக்கன் சென்றனன் - (அகம்பனாகிய) அரக்கன் அனுமனை நெருங்கிச் சென்றான்; அனுமன் “நன்று வருக” எனச் சேர்ந்தான் - (அது கண்ட) அனுமன் நல்லது வருக எனக்கூறி அவனை நெருங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Today I will send him up to the land of heaven, make the king of sword-bright Ilaṅkai
- the victor, leave those other men with nothing,
- and fix great, towering, lasting grief upon the gods," saying this,
- the rākṣasa went forward; "Good — come on," said Aṉumaṉ, and closed with him.
What the poem says
Akampaṉ boasts as he advances with his club. He will kill Aṉumaṉ today and make Irāvaṇaṉ, king of Ilaṅkai, victorious. The two men, Irāmaṉ and Ilakkuvaṉ, will be left defeated, and the gods will be plunged into lasting misery.
Aṉumaṉ welcomes the challenge and moves in to meet him.