கம்பராமாயணம் 8622 · யுத்த 21.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தட்டினார், தழுவினார் - (தோள் தட்டியவராய் (ஒருவரை ஒருவர்) தழுவிப் பிடித்தனர்; மேல் தாவினார் தரையினோடும் கிட்டினார் - விசும்பின் மேல் தாவினர் தரையிற் கிட்டி நெருக்கினார்; கிடைத்தார் - (ஒருவரை ஒருவர்) நெருங்கினார்; வீசிப்புடைத்தனர் கீழும் மேலும் - (ஒருவரை ஒருவர்) கீழும் மேலும் வீசி மோதிப் புடைத்தனர்; கட்டினார்; காத்தார் - நெருக்கிக் கட்டிக் கொண்டனர் (அக்கட்டினின்றும் நெகிழ்ந்து வெளிவந்து) தம்மைக் காத்துக்கொண்டனர்; ஒன்றும் இறவு காண்கிலார் - ஒருவர் (மற்றவர்) இறத்தலைச் சிறிதும் காண மாட்டாதவராயினர்; கண்ணுற்று ஒட்டினார்- ஒருவரை ஒருவர் நோக்கிச் சபதம் கூறினர்; மோதி வட்டம் ஓடினார்- (தம்முள்) மோதித் தாக்கி இடம் வலமாகச் சாரி திரிந்தனர்; ஆதிபோனார் - நேராக ஓடினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They slapped their shoulders; they grappled; they leapt up into the air; on the ground
- they closed in; they met, and hurled and battered each other, below and above;
- they locked holds; they guarded themselves; neither could see the other die; eyeing each other
- they swore their vows; clashing, they ran in circles; they rushed straight on.
What the poem says
The wrestling match goes on, again told in a string of short verbs. The two fighters grapple in the air and on the ground, lock each other in holds and break free.
They are so evenly matched that neither looks like dying. They glare at each other and swear oaths, then circle and charge again.