கம்பராமாயணம் 8623 · யுத்த 21.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் - பொய்ம்மையின் மாறுபட்டு நின்ற வாய்மையனாகிய அனுமன்; மய்யொடும் பகைத்து நின்ற நிறத்தினான் - மைக்குழம்புடன் பகைத்து மிகுந்து நின்ற கருமை நிறத்தை உடைய அகம்பனின்; வயிரமார்பில் புகுந்து மோத - திண்ணிய மார்பிடத்துப் (தண்டு கொண்டு) புகுந்து தாக்கிய அளவில்; வெய்யவன் அதனைத் தண்டால் விலக்கினான் - கொடியவனாகிய அகம்பன் அத் தாக்குதலைத் (தன் கையிற் கொண்ட) தண்டாயுதத்தால் தடுத்து விலக்கினான்; விலக்கலோடும் - அங்ஙனம் தடுத்த அளவில்; அக்கதை கய்யொடும் இற்று களம் கண்டது அன்றே - அந்தத் தண்டாயுதம் (அதனைப் பற்றிய அகம்பனின் வலக்) கையுடன் முறிந்து போர்க்களத்தில் வீழ்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the diamond-hard chest of him whose colour was the rival of black ink
- he whose nature was the enemy of falsehood came in and struck;
- the cruel one warded it off with his club; and as he warded it,
- that club broke, together with his hand, and fell upon the field.
What the poem says
Aṉumaṉ, whose nature is the opposite of falsehood, swings his club at Akampaṉ's chest. Akampaṉ is blacker than ink.
Akampaṉ blocks the blow with his own club, but the force of it snaps the club and his right hand along with it, and both fall to the ground. The verse sets Aṉumaṉ's truthfulness against Akampaṉ's dark colour and cruel character.