கம்பராமாயணம் 8630 · யுத்த 21.143

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும், வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன்; இரண்டு மூன்று காவதம் ஒழியப் பின்னும்
சுற்றிய சேனை நீர்மேற் பாசியின் மிடைந்து துன்ன.

பொருள் · Meaning in Tamil

மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் - ஏனைய படைத்தலைவர்கள் நாலு யோசனையும், ஐந்து யோசனையும் அளவே (அரக்கர் சேனையை) பொருது (உள்ளே) புகுந்தனர்; பின்னும் சுற்றிய சேனை - அதன் மேலும் சூழ்ந்து நின்ற படை, நீர்மேல் பாசிபோல் துள்ளி மிடையும் - நீர் மேல் பாசி படர்வதைப் போன்று விரைந்து நெருங்கும்; கொற்ற மாருதியும் - வெற்றி பொருந்திய அனுமனும்; வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் - வள்ளன்மை பொருந்திய லக்குவன் நின்ற இடத்திற்கு; இரண்டு மூன்று காவதம் ஒழியமுற்றினன் - இரண்டு மூன்று காவதங்கள் இடையிட்டுச் சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The others had fought their way in four and five yōjanas;
  2. and victorious Māruti too drew near the place where generous Ilakkuvaṉ stood,
  3. with two or three kātams still left between them; and all around them
  4. the encircling army leapt and crowded thick, like moss upon water.

What the poem says

The other commanders have pushed four or five yōjanas into the enemy. Aṉumaṉ has come close to where Ilakkuvaṉ is fighting, though a gap of two or three kātams, a smaller unit of distance, still separates them.

All around, the rākṣasa army keeps closing in, spreading like moss over water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟaiyōr nālum aintum yōcaṉai malaintu pukkār;
koṟṟa mārutiyum, vaḷḷal ilakkuvaṉ niṉṟa cūḻal
muṟṟiṉaṉ; iraṇṭu mūṉṟu kāvatam oḻiyap piṉṉum
cuṟṟiya cēṉai nīrmēl pācipōl miṭaiyum tuḷḷi.