கம்பராமாயணம் 8631 · யுத்த 21.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓர் உளைவு வந்து உள்ளம் தூண்ட - (இலக்குவனைக் காணாமையால் உண்டாக்கிய) ஒரு துயரந்தோன்றித் தன் உள்ளத்தைத் தூண்டுதலால்; இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்று - இளையோனாகிய இலக்குவன் நின்ற இடத்தினை விரைவில் அடைவேன் என்று; ஊழி வெங்காலின் செல்வான் - ஊழிக்காலத்து வீசும் பெருங்காற்றினைப் போன்று விரைந்து செல்பவனாகிய அனுமன்; விளைவன செருவில் மேய பல்வேறு ஆயின குறிகள் - (இலக்குவனால் அங்கு) நிகழ்வனவாகிய போர்ச் செயல்களில் பொருந்திய பல்வேறு அடையாளங்களை; களைவு அருந்துன்பம் நீங்கக் கண்டனன் - நீக்குதற்கரிய தன் மனத் துயரம் நீங்கும்படி கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I will quickly reach the place where the younger one stands," and as
- a pang rose and drove his heart, he went like the fierce wind at the end of the age;
- and, so that his hard-to-shake grief left him, he saw, they say,
- the many and varied signs that the battle there had brought about.
What the poem says
Worried because he cannot see Ilakkuvaṉ, Aṉumaṉ races toward him as fast as the wind at the end of the world.
On the way he sees what Ilakkuvaṉ's fighting has left behind, and the sight eases his fear. The next verses describe these signs one by one.