கம்பராமாயணம் 8634 · யுத்த 21.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானவேல் அரக்கர் விட்ட படைக்கலம் வானமாரி - (வீரத்தில் குறையாத) பெருமை வாய்ந்த வேற்படையை உடைய அரக்கர்கள் விடுவித்த ஆயுதங்களாகிய பெரு மழையை; ஆனவன் பகழி சிந்த - அத்தகைய வீரத்தன்மை உடையவனாகிய இலக்குவன் (எய்த) அம்புகள் துணிக்க; திசையொடும் பொறியோடு அற்ற - (அவை) திக்குகள் தோறும் தீப்பொறிகளோடும் துணிபட்டுத் (தரையில்) வீழ்வன; மீன் இனம் விசும்பினின்றும் இருள் உக வீழ்வபோல - விண்மீன் தொகுதிகள் வானத்தினின்றும் இருள் கெட வீழ்வனவற்றைப் போன்று (விழுவனவாகி); கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவுங் கண்டான் - காட்டிற் பற்றிய பெருந்தீயினையொத்துச் சுடுவன பலவற்றையும் (அனுமன்) கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The weapons that the rākṣasas of proud spears let fly, a rain from the sky,
- were cut down by that hero's mighty arrows and broke apart in every quarter with sparks,
- like hosts of stars falling from the sky so that darkness drains away,
- and many burned like a fire that runs on through a forest — these he saw.
What the poem says
The rākṣasas pour weapons at Ilakkuvaṉ like rain, and his arrows cut them down in mid-air. The pieces fall in showers of sparks, like stars dropping from the sky and lighting up the dark.
Some of them catch fire and burn like a forest fire.