கம்பராமாயணம் 8637 · யுத்த 21.150

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆளெலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாளெலாம் எண்ணினாலும் தொலைவு இல, நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன; தாங்கள் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான்.

பொருள் · Meaning in Tamil

ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் - (செலுத்தும்) வீரர்களை இழந்து வெறுமையுற்ற தேரும், யானையும் வெற்றி மிக்க குதிரையும்; நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா- (வாழ் நாட்களெல்லாம் (இருந்து) எண்ணினாலும் எண்ணத் தொலையாதனவாம்; நாதர் இன்றி, தாள் எலாம் குலைய ஓடித் திரிவன - (அங்ஙனம் தம்மைச் செலுத்தும்) தலைவர்களின்றி கால்களெல்லாம் குலைந்து தளருமாறு (நிலைபெறாது) ஓடித் திரிபவை; தாங்கல் ஆற்றும் கோள் இலா மன்னன் - தாங்கிக் காக்கும் கொள்கை இல்லாத (கொடுங்கோல்) மன்னனது; நாட்டுக்குடி எனக் குலைவு கண்டான் - நாட்டிலுள்ள குடி மக்களைப் போன்று நிலைகுலைந்து சிதைவனவற்றை மேலும் அனுமன் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chariots that had lost all their men, and elephants, and prancing horses,
  2. countless though one counted all one's days, without their masters,
  3. running about with all their legs trembling — like the people in the land
  4. of a king who has no will to protect them — he saw them in disarray.

What the poem says

Aṉumaṉ sees countless chariots, elephants and horses whose riders have been killed, running about leaderless with their legs shaking.

They are compared to the people of a country ruled by a king who does not care to protect them: with no one to guide them, they fall into confusion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḷ elām iḻanta tērum āṉaiyum āṭal māvum,
nāḷ elām eṇṇiṉālum tolaivu ila, nātar iṉṟi,
tāḷ elām kulaiya ōṭit tirivaṉa; tāṅkal āṟṟum
kōḷ ilā maṉṉaṉ nāṭṭuk kuṭi eṉak kulaiva kaṇṭāṉ.