கம்பராமாயணம் 8638 · யுத்த 21.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மடல் கொளும் அலங்கல் மார்பன்- இதழ்களை உடைய மலர் மாலையை அணிந்தவனான இலக்குவன்; மிடல் கொளும் பகழி மாரி- வன்மை பொருந்திய அம்பு மழையினை; வானினும் மும்மை வீசி மலைந்திட - மேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு சொரிந்து போர் செய்தமையால்; உலைந்து மாண்டார் -உயிர் நீங்கியவராகிய அரக்கரின்; உடல்களும் உதிர நீரும் ஒளிர்படைக்கலமும் - உடல்களும், இரத்தப் புனலும், ஒளி செய்கின்ற போர்க்கருவிகளும் உற்ற - பொருந்திய (அவற்றாலாகிய); கடல்களும் நெடிய கானும் கார்தவழ் மலையும் கண்டான் - கடல்களையும், பரந்த காட்டினையும் மேகந்தவழ்கின்ற மலையையும் (அனுமன் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pouring out a rain of mighty arrows three times thicker than the clouds,
- he of the chest garlanded with petalled flowers fought, and of those who broke and died —
- the bodies, the blood, the gleaming weapons — the seas
- they made, the long forests, and the cloud-capped mountains, he saw.
What the poem says
Ilakkuvaṉ shoots arrows three times thicker than rain from a cloud. The slain rākṣasas make a new landscape.
Aṉumaṉ sees their blood gathered into seas, their weapons heaped up like forests, and their bodies piled into mountains high enough to touch the clouds.