கம்பராமாயணம் 8639 · யுத்த 21.152

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

சுழித்து எறி ஊழிக்காலின் - (எல்லாப்பொருள்களையும்) சுழற்றி வீசும் யுகமுடிவுக் காலத்தின் பெருங்காற்றுப்போல; துருவினன் தொடரும் தோன்றல் - (இலக்குவனைத்) தேடிச் செல்லும் பெருமை மிக்கவனாகிய அனுமன்; தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான் - (நாற்புறத்தும்) வளைத்துக் கொண்டுள்ள குருதி நீர்க்கடலைத் தாவிக் கடந்து செல்லுபவன்; தனிப்பேர் அண்டம் கிழித்தது, கிழித்தது என்னும் - தனித்துள்ள இப்பெரிய அண்டத்தைக் கிழித்தது கிழித்தது என்னும்படியாக (எழுந்த); நாண் உரும் ஏறு கேட்டான் - (இலக்குவனது) வில் நாணின் ஒலியாகிய இடி ஓசையினைக் கேட்டவனாகி; அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் - (எல்லாப் பொருள்களையும்) அழித்தொழிக்கின்ற ஊழி முடிவுக்காலத்தில் ஆரவாரித்து(ப்பொங்கி) எழும், ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் - கடலைக் காட்டிலும் பெருமுழக்கம் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, seeking him like the whirling, hurling wind of the world's end,
  2. as he leapt the sea of blood that hemmed him round, heard the thunder of the bowstring
  3. that seemed to cry, "It has split the single great cosmos, it has split it!"
  4. and he roared twice as loud as the ocean that roars at the time of final ruin.

What the poem says

Aṉumaṉ, still searching for Ilakkuvaṉ, leaps across the sea of blood. Then he hears the twang of Ilakkuvaṉ's bowstring, so loud it seems to split the universe open.

Knowing now that Ilakkuvaṉ is alive and close by, Aṉumaṉ gives a roar of joy louder than the ocean at the end of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuḻittu eṟi ūḻik kāliṉ turuviṉaṉ toṭarum tōṉṟal,
taḻikkoṇṭa kuruti vēlai tāvuvāṉ, 'taṉip pēr aṇṭam '
kiḻittatu, kiḻittatu 'eṉṉum nāṇ urumēṟu kēṭṭāṉ;
aḻittu oḻi kālattu ārkkum ārkalikku iraṭṭi ārttāṉ.