கம்பராமாயணம் 8640 · யுத்த 21.153

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்த்த பேர் அமலை கேளா, 'அணுகினன் அனுமன்; எல்லார்
வார்த்தையும் கேட்கல் ஆகும் ' என்று அகம் மகிழ்ந்து, வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்து பணிந்தனன்; விசயப் பாவை
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

ஆர்த்த பேர் அமலைகேளா - ஆரவாரித்த (அனுமனின்) பேரொலியினைக் கேட்டு; “அனுமன் அணுகினன்” - அனுமன் (இங்கு) வந்து சேர்ந்தான்; எல்லாவார்த்தையும் கேட்கல் ஆகும் - (அவன் வாயிலாக) எல்லோருடைய செய்திகளையும் கேட்டறியலாம்; என்று அகம் மகிழ்ந்து - என்று தன்னுள்ளத்தே மகிழ்ச்சியுற்று; வள்ளல் பார்ப்பதன் முன்னம் - வள்ளன்மையுடையோனாகிய இலக்குவன், (அவ்வனுமனைத் திரும்பிப்) பார்ப்பதற்கு முன்னே; வந்து வணங்கினன் - (அவன் இலக்குவனை) அடைந்து வணங்கினான்; இளையவீரன் - (இராமனுக்கு) இளைய வீரனாகிய இலக்குவன்; விசயப்பாவை தூர்த்தனை - வெற்றி மங்கையைக் காமுற்றவனாகிய அனுமனை; தழுவினன் இனைய சொன்னான் - தழுவிக் கொண்டவனாய் (ப்பின்வருமாறு) இவ்வார்த்தைகளைக் கூறினான்.

விசயப்பாவை - வெற்றி மங்கை, தூர்த்தன் - காமுகன், அனுமன். அனுமன் நைட்டிக பிரம்மசாரியாக இருந்தும் பலரும் தழுவிய வெற்றி மங்கையை அவனும் தழுவியதாகக் கொண்டு அவனைத் தூர்த்தன் எனக் கூறிய நயம் உணர்ந்து மகிழ்தற்பாலது. பலருந்தழுவியவளைக் காமுகனையன்றிப் பிறர் தழுவாராதலின் தூர்த்தன் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing the great uproar of that roar — "Aṉumaṉ has come; everyone's
  2. news can now be heard," he thought, glad at heart — before the generous one
  3. could even look, Aṉumaṉ came and bowed; and the younger hero embraced
  4. the lover of the maiden Victory, and spoke these words.

What the poem says

Ilakkuvaṉ hears the roar and is glad, because Aṉumaṉ will have news of all the others. Before he can even turn round, Aṉumaṉ is there bowing to him, and Ilakkuvaṉ embraces him.

Aṉumaṉ is playfully called a 'rake' who courts the maiden Victory. The commentary enjoys the joke: Aṉumaṉ is a lifelong celibate, yet Victory, whom many heroes have embraced, has been embraced by him too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārtta pēr amalai kēḷā, 'aṇukiṉaṉ aṉumaṉ; ellār
vārttaiyum kēṭkal ākum ' eṉṟu akam makiḻntu, vaḷḷal
pārppataṉ muṉṉam vantu vaṇaṅkiṉaṉ; vicayap pāvai
tūrttaṉai iḷaiya vīraṉ taḻuviṉaṉ iṉaiya coṉṉāṉ.