கம்பராமாயணம் 8641 · யுத்த 21.154

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரிகுல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பிரிந்தது எங்கே?
விரி இருள் பரவைச்சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலன் உரைத்தி 'என்றான்; சென்னிமேல் கையன் சொல்வான்.

பொருள் · Meaning in Tamil

ஐய! அரிகுல வீரர் யாண்டையர்? - 'தலைமை சான்றவனே! (அனுமனே) குரக்குக் குலத்து வீரர்கள் எவ்விடத்தே உள்ளார்கள்? அருக்கன் மைந்தன் பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? - சூரியன் மகனான சுக்ரீவன் உன்னை விட்டுப் பிரிந்து சென்றது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே? - அங்கதன் சென்றது எங்கே? விரிஇருள் பரவைச் சேனை வெள்ளத்து - பரந்த இருட்கடலில் கலந்த சேனை வெள்ளத்தில்; விளைந்தது ஒன்றும் தெரிகிலென் உரைத்தி என்றான் - நிகழ்ந்த செயல் எதையும் அறிந்திலேன், (இவற்றை விளங்கக் சொல்வாயாக என (இலக்குவன்) வினவினான்; சென்னிமேல் கையன் சொல்வான் - (அது கேட்ட அனுமன்) தலைமேல் குவித்த கையனாய் (ப்பின் வருமாறு மறுமொழி) கூறுவானாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Where are the heroes of the monkey race, my lord? How did the son of the Sun
  2. come to be parted from you? Where has Aṅkataṉ gone?
  3. Of what has happened in the flood of the army, a spreading sea of darkness, I know
  4. nothing; tell me," he said; and Aṉumaṉ, hands joined above his head, replied.

What the poem says

Ilakkuvaṉ asks Aṉumaṉ for news. Where are the monkey heroes, how did Cukkirīvaṉ, son of the Sun god, get separated from him, and where has Aṅkataṉ gone?

The battlefield is covered in a magical darkness, and Ilakkuvaṉ cannot see what is happening. Aṉumaṉ raises his joined hands above his head in respect and answers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ari kula vīrar, aiya! yāṇṭaiyar? arukkaṉ maintaṉ
pirivu uṉaic ceytatu evvāṟu? aṅkataṉ peyarntatu eṅkē?
viri iruḷ paravaic cēṉai veḷḷattu viḷaintatu oṉṟum
terikileṉ uraitti 'eṉṟāṉ; ceṉṉimēl kaiyaṉ colvāṉ.