கம்பராமாயணம் 8643 · யுத்த 21.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய, உணர்வுறும் மாலைத்து மந்திரம் உளது - 'ஐயனே! (பகைவரது மாயையாற் பொருந்திய மயக்கம் நீங்கி) நல்லுணர்வினை அடையச் செய்யும் இயல்பினதாகிய உபாயம் ஒன்று உள்ளது; அஃது உன் சிந்தையின் உணர்ந்து - அதனை நின் மனத்தின் கண்ணே ஆராய்ந்து தெளிந்து; செய்யற்பாற்று எனின், செய்தி - (இப்பொழுது) செய்யத்தக்கதாயின் அதனைச் செய்வாயாக; தெவ்வர் தந்திரம் இதனை - பகைவருடைய சூழ்ச்சித்திறமாகிய இம்மயக்கத்தினை; தெய்வப்படையினால் சமைப்பின் அல்லால் - தெய்வத்தன்மை வாய்ந்த அத்திரங்களால் செய்தால் அன்றி; எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை” என்றான் - எந்தையே நின் அடித்தொண்டராகிய வானரவீரர்கள் எவரும் (மயக்கந்தெளிந்து) நின்னை வந்தடையும் ஆற்றலுடையவர் அல்லர்' என (அனுமன் இலக்குவனுக்கு) கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There is a means, my lord, of a kind that restores clear sight; consider it
- in your mind, and if it is fit to be done, then do it: unless the enemy's
- trickery is undone by a divine weapon,
- none of your servants, my father, will be able to reach you," he said.
What the poem says
Aṉumaṉ suggests a remedy. The confusion on the field is the enemy's sorcery, and only a divine weapon can break it. Until it is broken the monkey warriors cannot find their way back to Ilakkuvaṉ.
He puts the suggestion humbly and leaves the decision to Ilakkuvaṉ.