கம்பராமாயணம் 8644 · யுத்த 21.157

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில்லின் செல்வன் - விற்றொழில் வன்மையாகிய செல்வத்தை உடைய இலக்குவன்; அன்னது புரிவென் என்னா - (நீ கூறிய) “அதனையே செய்வேன்” என (அனுமனுக்குக்) கூறி; ஆயிர நாமத்து அண்ணல் தன்னையே வணங்கி வாழ்த்தி - ஆயிரம் திருப்பெயர்களை உடையவனாகிய இறைவனாம் இராமபிரானை வணங்கி, வாழ்த்தி; சரங்களைத் தெரிந்துதாங்கி - அம்புகளைத் தேர்ந்தெடுத்து; பொன்மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி - பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானது படைக்கலத்தினைப் பொருந்தும் படி செய்து; மின்னெயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் - மின்னலை ஒத்து விளங்கும் ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கரின் மீது செலுத்தினான்.

ஆயிரம் நாமத்து அண்ணல் - திருமாலின் அவதாரமான இராமபிரான். பொன்மலை வில்லினான் - மேருவை வில்லாகத் தாங்கிய சிவபெருமான், வில்லின் செல்வன் - இலக்குவன். அனுமன் குறித்தபடி செய்ய முடிவுசெய்த இலக்குவன், இராமபிரானைத் தியானித்து அம்புகளைத் தேர்ந்தெடுத்து அதில் பாசுபத அத்திரத்தினைப் பொருந்தச் செய்து அரக்கரின் மேல் ஏவினான் என்பதாம். சைவ - வைணவ வேறுபாடு உயர்ந்தோரிடம் இல்லை என்ற குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளமை உணரத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I will do just that," he said; and to the Lord of a thousand names
  2. alone he bowed, and praised him; he chose his arrows and took them up,
  3. set on them, as was fitting, the weapon of him whose bow is the golden mountain,
  4. and the master of the bow loosed it on the lightning-fanged rākṣasas.

What the poem says

Ilakkuvaṉ agrees. He first bows in his mind to Irāmaṉ, the Lord of a thousand names, that is, Viṣṇu come to earth. Then he picks his arrows and charges them with the weapon of Śiva, the god who used the golden mountain Mēru as his bow.

The commentary notes that a devotee of Viṣṇu here calls on Śiva's weapon. It takes this as a sign that the truly great make no distinction between Śaivism and Vaiṣṇavism.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉatu puriveṉ 'eṉṉā, āyira nāmattu aṇṇal
taṉṉaiyē vaṇaṅki vāḻtti, caraṅkaḷait terintu tāṅki,
poṉ malai villiṉāṉtaṉ paṭaikkalam poruntap paṟṟi,
miṉ eyiṟṟu arakkartammēl ēviṉāṉ villiṉ celvaṉ.