கம்பராமாயணம் 8646 · யுத்த 21.159

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மாபெரும் மாயை நீங்க மகோதரன் மறையப் போனான்;
ஏவரும் பிரிந்தார் எல்லாம், இன மழை இரிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார்.

பொருள் · Meaning in Tamil

தேவர்தம் படையை விட்டான் - (இலக்குவன்) தேவர்க்குரிய (திறல்மிக்க பாசுபதாத்திரத்தை) படைக்கலத்தை ஏவினான்; என்பது சிந்தை செய்யா - என்பதனை மனத்தில் எண்ணி; மாபெருந்தேரில் நின்ற மகோதரன் - மிகப்பெருந்தேரில் (அனைத்தையும் பார்த்துக்கொண்டு) நின்றவனாகிய மகோதரன்; மறையப் போனான் - (தான்ஏவிய) மாயை மறைந்தொழியத் தானும் அவ்விடத்தைவிட்டுப் போயினன்; யாவரும் இரிந்தார் எல்லாம் - (ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்த நிலையில் போராற்றிய) வானரத்தலைவர் யாவரும் (போரில்) நிலைகுலைந்து ஓடிய எல்லோருடனும்; இனமழை கழிய ஆர்த்து - மேகக் கூட்டங்கள் பின்னிடுமாறு ஆரவாரித்து; கோ இளங்களிற்றை - தலைமைசான்ற இளங்களிறு போன்றவனாகிய இலக்குவனை; வந்து கூடினார் ஆடல் கொண்டார் - வந்து சூழ்ந்தவராய் (மகிழ்ச்சி மிகுதியால்) கூத்தாடத் தொடங்கினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Realising that he had loosed the weapon of the gods,
  2. Makōtaraṉ, who stood on his huge great chariot, went off and vanished;
  3. all those who had been scattered, roaring so that the massed clouds fled,
  4. came and gathered round the young royal tusker, and broke into dance.

What the poem says

Makōtaraṉ, the rākṣasa who had cast the darkness, sees that a divine weapon has been used against it. He gives up and withdraws, and his sorcery fades with him.

The monkey leaders who had been scattered come rushing back, roaring with joy. They crowd round Ilakkuvaṉ, compared to a young royal elephant, and dance for happiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvartam paṭaiyai viṭṭāṉ eṉpatu cintai ceyyā,
mā perun tēril niṉṟa makōtaraṉ maṟaiyap pōṉāṉ;
yāvarum irintār ellām, iṉa maḻai kaḻiya ārttu,
kō iḷaṅ kaḷiṟṟai vantu kūṭiṉār; āṭal koṇṭār.