கம்பராமாயணம் 8647 · யுத்த 21.160
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவர்க்கும் தேவன் தம்பி - தேவாதி தேவனாகிய இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன்; யாவர்க்கும் தீது இலாமை - (தன் சேனையிலுள்ளார்) யாவர்க்கும் எவ்வித இடையூறும் நேராத தன்மையினை; கண்டு கண்டு உவகை ஏற - விடாமல் பார்த்து மகிழ்ச்சி மிகக் கொண்டவனாய்; திருமனத்து ஐயம் தீர்ந்தான் - (தான் முன்புகொண்ட) சந்தேகம் தீர்ந்தவனாகி; காவல் போர்க் குரங்கின் சேனை - (தனது) காவலிற் போர் புரியும் குரங்குப்படை; கடல் எனக் கலந்து புல்ல - கடல் போலத்திரண்டு (தன்னை நெருங்கி நிற்க; இமையோர் பூவர்க்கம் தூவ - வானவர் மலர்வகைகளைத் தூவ; பொலிந்தனன் - விளங்கி நின்றான்; தூதர் போனார் - தூதர்கள் (இச்செய்தியினைக் கூற இராவணனிடம்) சென்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing again and again that no harm had come to any of them, his joy rising,
- the brother of the God of gods was freed of the doubt in his noble heart;
- as the army of fighting monkeys he guarded pressed about him like the sea,
- and the immortals strewed every kind of flower, he shone; and the messengers went off.
What the poem says
Ilakkuvaṉ looks his warriors over again and again and sees that none of them has been harmed. His worry is gone. The monkey army crowds round him like the sea and the gods shower flowers on him.
Messengers leave to tell Irāvaṇaṉ what has happened. This sets up the next scene in Irāvaṇaṉ's court.