கம்பராமாயணம் 8652 · யுத்த 21.165

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் - (இந்திரசித்து) வேள்விக்குரிய சமித்துக்களை அம்பினாலேயே அமைத்தான்; அனலின் தும்பை மாமலர் தூவினன் - வேள்வித் தீயில் சிறந்த தும்பை மலர்களைத் தூவினான்; காரிஎள் சொரிந்தான் - கருமை நிறமுடைய எள்ளினைப் பெய்தான்; கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங்குருதி - கொம்பு, பல் ஆகியவற்றுடன் கரிய வெள்ளாட்டினது பெருகிய குருதியையும்; வெம்பு வெந்தசை முறையின் இட்டு - வேகக்கூடிய வெவ்விய தசையினையும் முறையாகப் பெய்து; எண்ணெயால் வேட்டான் - எள்ளின் நெய்யைச் சொரிந்து ஓமம் செய்தான்.

காரிஎள் - கரிய எள்; கரிய வெள்ளாடு. காராட்டை - வெள்ளாடு என்பது மங்கல வழக்கு. இருங்குருதி - நிறைந்து பெருகிய இரத்தம். நற்றேவதைக்குப் பூவும், புனலும், பூசனைக்காம்பொருளாகத் துர்தேவதைக்கு உயிர்ப்பலி கொடுத்து உலகோர் வணங்குதல் போல அரக்கனிடம் இருந்த பிரம்மாத்திரத்திற்கு உயிர்ப்பலி இட்டு அதன் அதிதேவதையை வழிபட்டான் என்பதாம்.

தீயவை தீமைபயத்தல் ஒருதலை; இவன் வேள்வியும் அத்தகையதே. கருவியென்பது கருத்தாவின் கருத்தின்படி இயங்குவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With arrows he made the great sacrificial sticks; into the fire
  2. he strewed fine tumpai flowers; he poured in black sesame;
  3. with horns and teeth, the thick blood of a black goat
  4. and its seething flesh he offered in due order, and made oblation with oil.

What the poem says

Intiracittu's sacrifice is a dark version of a Vedic rite. Instead of sacred wood he uses arrows as fuel. He offers tumpai, the flower of war, black sesame, and the horns, teeth, blood and flesh of a black goat, and pours in sesame oil.

The commentary explains that he is worshipping the presiding deity of the Brahmā weapon with blood sacrifice, as people offer animal sacrifice to fierce deities. A wicked rite brings wicked results.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampiṉāl peruñ camitaikaḷ amaittaṉaṉ; aṉalil
tumpai mā malartūviṉaṉ; kāri eḷ corintāṉ;
kompu palloṭu, kariya veḷḷāṭṭu iruṅ kuruti,
vempu ven tacai muṟaiyiṉ iṭṭu, eṇṇeyāl vēṭṭāṉ