கம்பராமாயணம் 8653 · யுத்த 21.166

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

எரி நறுவெறி வயங்கி வலஞ் சுழித்து வந்து எழுந்து - (வேள்வியின்) தீயானது நறுமணத்துடன் வலது புறமாகச் சுழன்று வந்து மேலெழுந்து; நலம் சுரந்தன பெருங்குறி முறைமையின் நல்க - நன்மையை விளைவிப்பனவாகிய பெரிய அறிகுறிகளை முறைப்படி புலப்படுத்திக்காட்ட; குலம் சுரந்து எழு கொடுமையான் முறையினில் கொண்டே - (அரக்கர்) குலத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் கொடுமைகட்கெல்லாம் நிலைக்களமான இந்திரசித்து (தீவலம் சுழித்த) அம்முறைமையினை ஆதரவாகக் கொண்டு; “நிலம் சுரந்து எழுவென்றி” என்று உம்பரில் நிமிர்ந்தான் - 'செருநிலத்தில் வெற்றி பெருகித் தோன்றும்' என்று (எண்ணியவனாய்) விசும்பின் மேல் உயர்ந்து சென்றான்.

யாகத்தீ வலமாகச் சுழன்று எழுவது நற்சகுனமாகக் கொள்ளப்பட்டது. எனவே, இந்திரசித்து தனக்கு வெற்றி கிடைப்பது உறுதி என எண்ணியவனாய் வானில் உயர்ந்தான் என்பதாம்.

அரக்கர் குலமாகிய ஊற்றுச் சுரந்த கொடுமையின் வடிவமாக இந்திரசித்து வர்ணிக்கப் பெறுகின்றான். நிலம் - போர்க்களம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fire turned to the right and rose up, glowing and fragrant,
  2. and in due order gave great signs brimming with good;
  3. he in whom the cruelty welling from his race rose up, taking them so in due course,
  4. and thinking, "Victory will spring up on the field," rose up into the sky.

What the poem says

The sacrificial fire turns clockwise as it rises and gives off a sweet smell, both good omens. Intiracittu takes them as a promise of victory on the battlefield and rises into the sky.

The poet calls him the embodiment of all the cruelty that wells up in the rākṣasa race.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valam cuḻittu vantu eḻuntu eri naṟu veṟi vayaṅki,
nalam curantaṉa peruṅ kuṟi muṟaimaiyiṉ nalka,
kulam curantu eḻu koṭumaiyāṉ, muṟaiyiṉil koṇṭē,
'nilam curantu eḻu veṉṟi ' eṉṟu umparil nimirntāṉ.