கம்பராமாயணம் 8654 · யுத்த 21.167

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப்
பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன்; முனிவரும் அறியார்;
தசும்பு நுண்நெடுங் கோளொடு காலமும் சார.

பொருள் · Meaning in Tamil

மாயையின் பெருமையான் - (யாவரையும் மயக்குந் தன்மையாகிய) மாயத்தின் மிகுதியை உடையவனாகிய இந்திரசித்து; தசும்பு நுண் நெடுங்கோளொடு காலமும் சார - (வானப்பெருவெளியில்) அசையுந்தன்மையனவாகிய நுண்ணிய நீண்ட கோள்களுடன் (வெற்றியைத் தரும்) காலமும் சேர; விசும்பு போயினன் - ஆகாயத்தில் சென்றவனாகி; மேலைப் பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா - மேலேயுள்ள பசிய பொன்மயமான துறக்க உலகத்தவராகிய தேவர்களுடைய கண்களும் உள்ளமும் (ஊடுருவிச் செல்ல முடியாத; அசும்பு விண்ணிடை அடங்கினன் - நீர்த்திவலையை உடைய வானத்திடையிலே நுண்ணுருவுடையவனாய் ஒடுங்கினான்; முனிவரும் அறியார் - (அவனது இருப்பினை) முனிவர்களும் அறிய முடியாதவராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He of mighty sorcery went into the sky; where neither the eyes nor the minds
  2. of those who dwell in the green-gold land above could reach,
  3. he hid himself in the dewy sky, unknown even to the sages,
  4. as the hour came on, together with the subtle, far-ranging planets.

What the poem says

Intiracittu, master of illusion, goes up into the sky and makes himself so small and hidden that neither the gods of heaven nor the sages can see or sense him.

He waits there for the moment when the planets line up for his victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vicumpu pōyiṉaṉ, māyaiyiṉ perumaiyāṉ; mēlaip
pacum poṉ nāṭṭavar nāṭṭamum uḷḷamum paṭarā,
acumpu viṇṇiṭai aṭaṅkiṉaṉ; muṉivarum aṟiyāt
tacumpu nuṇ neṭuṅ kōḷoṭu kālamum cāra.