கம்பராமாயணம் 8655 · யுத்த 21.168

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனையன் நின்றனன்; அவ் வழி மகோதரன் அறிந்து, ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதத்து எருத்தின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் அவரொடும் போர் செய மூண்டான்.

பொருள் · Meaning in Tamil

அனையன் நின்றனன் - அத்தன்மையனாகிய இந்திரசித்து (வானகத்து உருக்கரந்து) நின்றான்; அவ்வழி மகோதரன் அறிந்து ஓர் வினையம் எண்ணினன் - அப்போது மகோதரன் அதனை அறிந்து ஒரு சூழ்ச்சிச் செயலைச் செய்ய எண்ணியவனாய்; இந்திர வேடத்தை மேவி - இந்திரனது உருவத்தைத்தான் மேற்கொண்டு; துனைவலத்து அயிராவதக் களிற்றின் மேல் தோன்றி - வேகமும் வலிமையுங் கொண்ட ஐராவதக் களிற்றின் மேல் தோன்றி; முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் - முனிவர் தேவர் முதலியவர்களோடும் போர் புரிய முனைந்தெழுந்தான்.

அஃதாவது தேவர் முனிவர் முதலானோரும் அறிய முடியாதபடி மறைந்து நின்ற இந்திரசித்து என்றவாறு, வினையம் - சூழ்ச்சிச் செயல். துனைவு - விரைவு; வேகம். வலம் - வன்மை, அயிராவதம் - ஐராவதம் - இந்திரனுக்குரிய வாகனமாகிய வெள்ளையானை. இந்திரசித்தன் மறைந்து நின்றமையை பாம்பறியும் பாம்பின் கால் என்பது போல மகோதரன் தன்மாயை வன்மையால் உணர்ந்தனன் என்க.

மகோதரன் சூழ்ச்சி - வெற்றிக்களிப்பில் மூழ்கி ஆரவாரித்து நின்ற வானரப்படையைத் திகைப்படையச் செய்தல். இதனால் தோன்றும் குழப்பம் இந்திரசித்தனின் முயற்சிக்கு (பிரமாத்திரம் விடுதற்குப் பெரிதும் துணை நிற்கும். என்ன நிகழ்ந்தது என இலக்குவன் முதலானோர் உணராமுன்னமே அவர்களை வீழ்த்திவிட வேண்டும் என்பது நோக்கம். அலதேல் அவ்விலக்குவன் இந்திர சித்தனின் பிரமாத்திரத்தைத் தடுத்துவிடுதலும் கூடுமாதலின் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He stood so; then Makōtaraṉ, aware of it, thought up
  2. a stratagem: taking on the form of Indra,
  3. appearing on the elephant Airāvatam, swift and strong,
  4. he joined battle along with sages and gods of every kind.

What the poem says

Makōtaraṉ, himself a sorcerer, senses where Intiracittu is hiding. He decides to help him with a trick. He takes the form of Indra, king of the gods, rides Indra's white elephant Airāvatam, and comes onto the field with an illusory company of gods and sages.

The commentary explains the plan. The startled monkey army will not know what is happening, and in the confusion Intiracittu can loose the Brahmā weapon before Ilakkuvaṉ realises and counters it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyaṉ niṉṟaṉaṉ; av vaḻi makōtaraṉ aṟintu, ōr
viṉaiyam eṇṇiṉaṉ, intira vēṭattai mēvi,
tuṉai valattu ayirāvatak kaḷiṟṟiṉmēl tōṉṟi,
muṉaivar vāṉavar evaroṭum pōr ceya mūṇṭāṉ.