கம்பராமாயணம் 8656 · யுத்த 21.169
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கர் மானிடர் குரங்கு எனும் அவை எல்லாம் அல்லா - (தன் இனத்தவராகிய) அரக்கரும் (பகைவர் இனத்தவராகிய) மனிதரும் குரங்கும் ஆகிய அவை அல்லாத; உருக்கள் யாவுள உயிர் இனி உலகத்தின் உழல்வ - உருவங்களை உடையவாய் இவ்வுலகத்தில் திரிவனவாகிய உயிரினங்கள் யாவை உள்ளன. அவை எல்லாமும் (இப்பொழுது); தருக்கும் போர்க்கு வந்தனவாம் எனச் சமைத்தான் - (இலக்குவன் முதலானோரோடு) செருக்கச் செய்யும் போர்க்கு துணைசெய்ய) வந்துள்ள எனக் கண்டோர் கருதும்படி (மகோதரன்தன் மாயத்தால்) படைத்துக் காட்டினான்; வெருக்கொளப் பெருங் கவிப்படை குலைந்தது விலங்கி - (அதுகண்டு) பெரிய வானர சேனை அச்சங்கொண்டு நிலை கெட்டுப் பின் வாங்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Every form of life other than rākṣasas, men and monkeys,
- whatever beings with bodies there are that roam the world,
- have all come to this proud war" — so he made it seem;
- and the great monkey army, struck with terror, broke and fell back.
What the poem says
Makōtaraṉ's illusion fills the battlefield with every kind of creature that is not a rākṣasa, a man or a monkey. It looks as if all the beings of the world have come to fight against Irāmaṉ's side.
The monkey army is terrified and falls back in confusion.