கம்பராமாயணம் 8657 · யுத்த 21.170

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கோடு நான்குடைப் பால்நிறக் குன்றமேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமரர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்? 'என உலைந்தார்.

பொருள் · Meaning in Tamil

கோடு நான்குடைப்பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் - நான்கு தந்தங்களை உடைய பால் போன்ற வெண்ணிற யானை மேல் ஏறி வருபவன்; ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர் - வலிமை வாய்ந்த இந்திரன் (அவனைச் சூழ்ந்துள்ள) ஏனையோர் தேவர்கள்; சேடர் சிந்தனை முனிவர்கள் - எஞ்சியோர் இறைவனை எண்ணியிருக்கின்ற முனிவர்கள்; அமர் பொரச் சீறி - இங்ஙனம் வானுலகவர் (நம்மீது பகையுடன் போர் செய்தற்குச் சீற்றங்கொண்டு; ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம்? என உலைந்தார் - (இப்போர்க்களத்தின் இடையே வந்து சேர்ந்தது எக்காரணத்தினாலோ' என (வானரர் திகைப்புற்று) வருந்தினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He who rides the milk-white elephant with four tusks
  2. is mighty Indra; all the others are immortals,
  3. and the rest are sages rapt in thought; in fury to wage war on us,
  4. why have they come in among us?" they wondered, dismayed.

What the poem says

The monkeys recognise Indra by his four-tusked white elephant and see gods and sages around him. They are baffled and upset, unable to understand why the gods, who should be on Irāmaṉ's side, have come to attack them.

This was Makōtaraṉ's aim: to make the monkeys doubt and panic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōṭu nāṉkuṭaip pāl niṟak kaḷiṟṟiṉmēl koṇṭāṉ
āṭal intiraṉ; allavar yāvarum amarar,
cēṭar, cintaṉai muṉivarkaḷ; amar porac cīṟi
ūṭu vantu uṟṟatu eṉkolō, nipam? 'eṉa ulaintār.