கம்பராமாயணம் 8658 · யுத்த 21.171

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனுமன் வாள்முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தம்பி,
'முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, உணர்ந்து 'எனச்சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட - சக்கரப்படையை நீக்கி வில்லை வலக்கையிற் கொண்ட; தாமரைக் கண்ணவன் தம்பி - செந்தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன்; அனுமன் வாள் முகம் நோக்கினன் - அனுமனது ஒளிபொருந்திய முகத்தை நோக்கியவனாய், முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த - முனிவர்களும் தேவர்களும் சினந்து (நம்முடன் போர் செய்ய) வருமாறு; யாம் முயன்ற துனி இது என்கொலோ - நாம் செய்த வெறுக்கத்தக்க குற்றம் யாதோ? சொல்லுதி உணர்ந்து எனச் சொன்னான் - ஆராய்ந்து கூறுவாயாக” என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looked at Aṉumaṉ's shining face — he, the brother of the lotus-eyed Lord
  2. who laid aside his discus and took the bow in his right hand —
  3. "That sages and gods should come against us in anger — what wrong
  4. is this that we have done? Tell me, quickly," he said.

What the poem says

Ilakkuvaṉ is puzzled too and turns to Aṉumaṉ for advice. Why would the gods and sages be angry with them, and what wrong have they done?

Irāmaṉ is described as the lotus-eyed Lord who has put down the discus he holds as Viṣṇu and taken up the bow in his human life. The divine figures before them are only an illusion, but Ilakkuvaṉ does not yet know it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉumaṉ vāḷ mukam nōkkiṉaṉ, āḻiyai akaṟṟit
taṉu valam koṇṭa tāmaraik kaṇṇavaṉtampi,
'muṉivar vāṉavar muṉintu vantu eyta, yām muyaṉṟa
tuṉi itu eṉkolō? colluti, viraintu 'eṉac coṉṉāṉ.