கம்பராமாயணம் 8659 · யுத்த 21.172

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால்வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போல,
மன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த.

பொருள் · Meaning in Tamil

இன்ன காலையின் - இவ்வாறு (அனுமனை நோக்கி இலக்குவன்) வினவும் நேரத்தில்; முன்னை நான் முகன் படைக்கலம் - (இந்திரசித்து) காலத்தால் முற்பட்ட முதியவனாகிய பிரமதேவனது படைக்கலத்தை; இமைப்பதன் முன்னம் - ஓர் இமைப்பொழுதிற்குள்; இலக்குவன் மேனி மேல் எய்தான் - இலக்குவனது உடலின் மீது செலுத்தினான்; பொன்னின் மால் வரைக்குரீஇ இனம் மொய்ப்பது போல - பொன் மயமான பெரிய மலையின் மீது குருவிக் கூட்டங்கள் மொய்ப்பதைப் போன்று; பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த - சொல்லும் தன்மைய வல்லாத ஒளிமிக்க அம்புகள் (இலக்குவனது மேனியிற்) பாய்ந்து தைத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that very moment he loosed upon Ilakkuvaṉ's body
  2. the weapon of ancient four-faced Brahmā; before an eyelid could blink,
  3. like flocks of sparrows swarming over the great golden mountain,
  4. blazing arrows past all telling struck into him.

What the poem says

While Ilakkuvaṉ is distracted by the illusion, Intiracittu, hidden in the sky, looses the Brahmā weapon at him. This was the whole point of the sacrifice and of Makōtaraṉ's trick.

In the blink of an eye countless blazing arrows cover Ilakkuvaṉ's body, like flocks of small birds settling all over the golden mountain Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa kālaiyiṉ ilakkuvaṉ mēṉimēl eytāṉ,
muṉṉai nāṉmukaṉ paṭaikkalam; imaippataṉ muṉṉam
poṉṉiṉ māl varaik kurīiiṉam moyppatu pōla,
paṉṉal ām taram allaṉa cuṭarkkaṇai pāynta.