கம்பராமாயணம் 8660 · யுத்த 21.173

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோடி, கோடி, நூறாயிரம் சுடர்க்கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக்கரி சேவகம் அமைந்தனெ, அசைந்தான்.

பொருள் · Meaning in Tamil

கோடி, கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் - கோடி கோடி நூறாயிரம் என்னும் தொகையினவாகிய ஒளி படைத்த அம்பின் தொகுதிகள்; மேனியை மூடி முற்றுறச் சுற்றின மூழ்க - (இலக்குவனது) மேனியை முழுவதுமாக மூடி மறைத்துத் தைக்க; ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் - அவ்விடை நேரத்தில் இன்னது செய்வது என்று ஒன்றும் உணராதவனாகி; உணர்வு புக்கு ஒடுங்க - தன்னுணர்வு உள்ளே சென்று ஒடுங்க; ஆடல்மாக்கரி சேவகம் அமைந்தென அயர்ந்தான் - வலிய பெரிய யானையானது தான் துயிலுமிடத்தில் அயர்ந்து துயில் கொண்டாற்போன்று அயர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crores upon crores, hundreds of thousands, swarms of blazing arrows
  2. covered his body and sank into it on every side;
  3. he could think of nothing to do in that moment; his senses withdrew within,
  4. and like a mighty war-elephant settling into its sleeping place, he swooned.

What the poem says

Ilakkuvaṉ's body is buried under countless arrows. He has no time to respond. He loses consciousness and sinks down like a great elephant lying down to sleep in its stall.

The gentle image hides the horror. To the reader Ilakkuvaṉ seems to be dead, though the story will later show otherwise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭi, kōṭi, nūṟāyiram cuṭark kaṇaik kuḻāṅkaḷ
mūṭi mēṉiyai muṟṟuṟac cuṟṟiṉa mūḻka,
ūṭu ceyvatu oṉṟu uṇarntilaṉ, uṇarvu pukku oṭuṅka,
āṭal māk kari cēvakam amainteṉa, ayarntāṉ.