கம்பராமாயணம் 8662 · யுத்த 21.175

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அருக்கன் மாமகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆமெனக் குருதி நீர் முடுக,
தருக்கி வெஞ்சரம் தலைத்தலை மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன்ன கண்ணினன், நெடுநிலம் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

அருக்கன் மாமகன் - பெருமை வாய்ந்த சூரியன் புதல்வனான சுக்ரீவன்; ஆடகக் குன்றின் மேல் அலர்ந்த - பொன்மலையின் மேல்பூத்துத் தோன்றும்; முருக்கின் கானகம் ஆம் எனக் குருதி நீர் முடுக - செம்முருங்கக் காட்டினை யொத்து (தன் உடம்பின்மேல்) இரத்தம் சுரந்து பெருகித் தோன்றுமாறு; வெஞ்சரம் தலைத் தலைமயங்கின தைக்க - வெம்மையுடைய அம்புகள் (தன் உடம்பின் இடந்தோறும் விரவினவாய்த் தைத்து ஊன்றுதலால்; உருக்கு செம்பு எனக் கண்ணினன் - “உருகிய செம்பு” எனக் கூறத்தக்க (சிவந்த) கண்களை உடையவனாக; தருக்க, நெடுநிலம் உற்றான் - செருக்குற்று நீண்டதரையிடத்தே வீழ்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great son of the Sun — as a forest of murukku trees
  2. blooms on a golden hill, so the streams of blood rushed out over him;
  3. as cruel arrows, pressing proudly, sank into him everywhere,
  4. his eyes like molten copper, he fell to the wide earth.

What the poem says

Cukkirīvaṉ, son of the Sun god, is struck next. Blood streams over his golden body like the red flowers of a murukku (coral) tree forest blooming on a golden hill.

His eyes burn red like molten copper with fury, and he falls.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arukkaṉ mā makaṉ, āṭakak kuṉṟiṉmēl alarnta
murukkiṉ kāṉakam ām eṉa, kuruti nīr muṭuka,
tarukki veñ caram talaittalai mayaṅkiṉa taikka
urukku cempu eṉa kaṇṇiṉaṉ, neṭu nilam uṟṟāṉ.