கம்பராமாயணம் 8663 · யுத்த 21.176
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கதன் பதினாயிரம் அயில்கணை அழுந்த - அங்கதன் (தன் உடல் மீது) பதினாயிரம் கூரிய அம்புகள் தைக்கப்பெற்று; சிங்க ஏறு இடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான் - ஆண்சிங்கம் இடியினால் தாக்கப் பட்டாற்போன்று நெடிய நிலத்தில் வீழ்ந்தான்; துங்க மார்பையும் தோளையும் வடிக்கணை துளைக்க - உயர்ந்த மார்பையும், தோளையும் கூரிய அம்புகள் துளைத்ததனால்; சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான் -வீரர் குழுவில் உயர்ந்து விளங்கிய பெரிய புகழினனான சாம்பவனும் (தரையில்) சாய்ந்தான்.
சங்கம் - குழு, அவைக்களம். சிறந்த அனுபவமும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் விடா முயற்சியும் பின்னிடாவீரமும் அமையப் பெற்றவன் சாம்பவான். எனவே, பெரும்புகழ்ச்சாம்பன் எனப்பட்டான். இன்றும் “நீ பெரிய சாம்பவனோ?” எனவும், “அதில் அவர் சாம்பவான்” எனவும் உலகியலில் பேசப்படுதலைக் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṅkataṉ, with ten thousand sharp arrows sunk deep in him,
- fell to the wide earth like a lion struck by a thunderbolt;
- Cāmpaṉ too, of great fame, honoured high in every assembly, went down,
- as keen arrows pierced his lofty chest and his shoulders.
What the poem says
The Brahmā weapon brings down one leader after another. Aṅkataṉ falls like a lion struck by lightning. Cāmpaṉ, the old bear king Jāmbavān, falls with his chest and shoulders pierced.
The commentary notes that Jāmbavān stood for experience, persistence and courage, so that 'a real Jāmbavān' became a Tamil saying for a seasoned expert.