கம்பராமாயணம் 8668 · யுத்த 21.181
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சதுமுகன் பெரும்படை தள்ளித் தளைத்து வைத்தது - நான் முகனது பெருமை வாய்ந்த படைக்கலமானது (வானரங்களைக் கீழே) தள்ளிப் பிணித்துவிட்டது; ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர் - (அவ்விடத்தை விட்டுத் தப்பியோடி) மறைதற்கு அன்னோர் வேறொரு பாதுகாப்பான இடத்தை உணர்தற்கு இயலாதவராயினர்; உருமின் வளைத்து வித்திய வாளியால் மண்ணொடும் திண்ணம் - இடியினைப் போன்று சுற்றிலும் எய்யப்பெற்ற அம்புகளால் பூமியுடன் சேர்த்து உறுதியாக; முளைப்புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த - முளையடிக்கப் பட்டவற்றை ஒத்தனவாய் அங்குள்ள வானரங்கள் யாவும் இறந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great weapon of the Four-Faced one thrust them down and held them bound;
- they could find no other refuge in which to hide; by arrows
- sown all around them like thunderbolts, fast to the earth
- they were like things pegged down; and the monkeys perished.
What the poem says
Brahmā's weapon pins the monkeys to the ground and they have nowhere to run or hide.
The arrows, sown all around them like thunderbolts, nail their bodies to the earth like tent pegs, and so the monkeys die.