கம்பராமாயணம் 8669 · யுத்த 21.182

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குவளைக் கண்ணினை வானவர் மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதிநீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடைபரந்து இடைசெறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப்பரவை.

பொருள் · Meaning in Tamil

குவளைக் கண்ணினைக்கோட்டி - நீலமலர்போன்ற கண்களைச் சாய்த்து நோக்கி, வான் அரமடந்தையர் துவள - வானுலகிலுள்ள தேவமகளிர் வாட்டமுற்று வருந்த; பாரிடைக் கிடந்தனர் - (வானரவீரர்கள்) பூமியிற் (பிணமாகக்) கிடந்தார்கள்; குருதி நீர் சுற்றிக் கீழொடு மேல் புடை பரந்து - (அவர்தம் வெண்ணிற உடம்பினின்றும் வெளிப்பட்ட) இரத்த நீர் கீழும் மேலும் பக்கங்களிலும் பரவி; இடை திவள செறிய - இடையிடையே நெருங்கி விளங்குதலால்; அப்பரவை, பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது - அந்த (வானரப்படையாகிய) கடற்பரப்பானது பவளக்கொடிகளாகிய காடுகளையுடைய பாற்கடலை ஒத்துத் தோன்றியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the maidens of heaven turned their lily-dark eyes aside
  2. and drooped in grief, they lay upon the earth; as blood ran round them,
  3. glistening, spreading below and above and on every side and crowding in between,
  4. that expanse was like the Sea of Milk with forests of coral in it.

What the poem says

The monkeys lie dead on the ground while the heavenly women look on and grieve.

The monkeys' bodies are pale, and red blood spreads all round and between them. The whole field looks like the white Sea of Milk with red coral growing through it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuvaḷaik kaṇṇiṉai vāṉ ara maṭantaiyar kōṭṭit
tuvaḷa, pāriṭaik kiṭantaṉar; kuruti nīr cuṟṟit
tivaḷa, kīḻoṭu mēl puṭai parantu iṭai ceṟiya,
pavaḷak kāṭuṭaip pāṟkaṭal ottatu, ap paravai.