கம்பராமாயணம் 8670 · யுத்த 21.183

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்ணில் சென்றது, கவிக்குலப் பெரும்படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
'மண்ணில் செல்லுதிர் இக் கணத்தே ' என வலித்தார்.

பொருள் · Meaning in Tamil

கவிக்குலப் பெரும்படை வெள்ளம் விண்ணில் சென்றது - வானரகுலப்பெரும் படையாகிய வெள்ளம் (மண்ணில் உயிர்துறந்து தேவர்களாகி) விண்ணுலகிற் சென்றது; வானவர் கண்ணில் கண்டனர் விருந்து எனக் கலந்தார் - (அதனைத்) தேவர்கள் தம் கண்களாற் கண்டவர்களாய் விருந்தினர்என (அன்பினாற்) கலந்தவர்களாய்; உள்நிற்கும் பெருங்களிப்பினர் - உள்ளத்தில் நிலைபெற்ற பெருங்களிப்பினை உடையவர்களாய்; அளவளாய் உவந்தார் - (அவர்களோடு) அளவளாவி மகிழ்ந்தார்கள்; இக்கணத்தே மண்ணில் செல்லுதிர்- (நீங்கள், எம்பொருட்டு) இப்பொழுதே மண்ணுலகத்திற்கு (மீண்டு) செல்வீராக; என வலித்தார் - எனவற்புறுத்தி வேண்டினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great flood of the monkey host went up to heaven;
  2. the gods saw them with their own eyes and mingled with them as honoured guests;
  3. filled with deep joy within, they talked with them and rejoiced,
  4. yet in their hearts they said, "Go back to the earth this very moment."

What the poem says

The souls of the dead monkeys rise to heaven. The gods welcome them as honoured guests and talk with them happily.

Yet the gods also urge them to go straight back to earth, because the monkeys' work for Irāmaṉ, which is also the gods' work, is not yet done.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇil ceṉṟatu, kavik kulap perum paṭai veḷḷam;
kaṇṇil kaṇṭaṉar vāṉavar, viruntu eṉak kalantār,
uḷ niṟkum peruṅ kaḷippiṉar, aḷavaḷāy uvantār;
'maṇṇil cellutir ik kaṇattē ' eṉum maṉattār.