கம்பராமாயணம் 8671 · யுத்த 21.184

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரிசிலை நெடியோன் - வரிந்து கட்டப்பெற்ற வில்லினை உடையோனாகிய இராமபிரானது; பேர்படைத்தவர்க்கு - பெயரைத் தரித்தவர்களுக்கு; அடியவர்க்கு அடியரும் - அடித்தொண்டுபட்டார்க்கு அடியவராயினாரும்; வேர்படைத்த வெம்பிறவியில் - (வினையாகிய) வேரூன்றிட வெம்மையான பிறவியினால்; துவக்குணா வீடு பெறுவர் - பிணிக்கப்படாது, வீடு பேற்றினைப் பெறுவர்; (என்றால்); நீர்படக் கடவீர் அலீர் - (இராமபிரானது சேவையிலிருக்கின்ற) நீங்கள் (இங்ஙனம் அகாலமாக) இறக்கும் தன்மை உள்ளவர்களல்லீர்; பார்படைத்தவன் படைக்கு - இவ்வுலகைப் படைத்த பிரமதேவனுடைய படையாகிய பிரமாத்திரத்திற்கு; ஒரு பூசனை படைத்தீர் - செய்யத்தக்கதொரு வழிபாட்டினைச் செய்தவராய் (நும் உடம்பைத் துறந்து) இவ்விடம் வந்தீர்கள்!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You have offered a kind of worship to the weapon of him who made the world;
  2. you are not such as should die; for even the servants of the servants
  3. of those who bear the name of the Tall One with the banded bow win
  4. release, unbound by cruel birth that has struck its roots deep."

What the poem says

The gods speak to the monkeys. Anyone who serves those who serve Irāmaṉ, the tall hero with the bound bow, is freed from the cycle of rebirth. Irāmaṉ's own servants, then, cannot really die.

The gods say the monkeys' death is only a mark of respect paid to Brahmā's weapon, which must not be made useless, and not a true end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pār paṭaittavaṉ paṭaikku oru pūcaṉai paṭaittīr;
nīr paṭak kaṭavīralīr; vari cilai neṭiyōṉ
pēr paṭaittavaṟku aṭiyavarkku aṭiyarum peṟuvār,
vēr paṭaitta vem piṟaviyil tuvakkuṇā, vīṭu.