கம்பராமாயணம் 8673 · யுத்த 21.186
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“வெங்கண் வானரக் குழுவொடும் - 'வெகுளி மிக்க கண்களை உடைய வானரக் கூட்டத்துடன்; இளையவன் விளிந்தான் - இலக்குவன் இறந்து பட்டான்; இராமன் இப்போது இங்கு வந்திலன்' - (அவன் தமையனாகிய இராமனோ (யான் பிரமாத்திரம் விடுத்த இப்பொழுது) இப்போர்க்களத்திடத்து வந்து சேர்ந்திலன்': என இகழ்ந்தான் - என்று இகழ்ந்தவனாகிய இந்திரசித்து; சங்கம் ஊதினான் - (வெற்றிச்) சங்கினை ஊதினான்; தாதையை வல்லையில் சார்ந்தான் - (பிறகு) தன்தந்தையாகிய இராவணனை விரைவிற் சென்றடைந்து; பொங்கு போரிடை - எழுச்சி மிக்க போரின்கண்; புகுந்துள பொருள் எலாம் புகன்றான் - விளைந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எடுத்துரைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The younger one is dead, along with the fierce-eyed monkey host;
- Irāmaṉ has not come here just now," he said in scorn;
- he blew his conch; he went swiftly to his father;
- and told him all that had come to pass in the surging battle.
What the poem says
Intiracittu believes he has won. Ilakkuvaṉ and the whole monkey army are dead, and he scoffs that Irāmaṉ never even came to the field.
He blows his conch in victory and hurries to tell his father Irāvaṇaṉ everything that has happened.