கம்பராமாயணம் 8674 · யுத்த 21.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“இறந்திலன் கொலாம் இராமன்?” - (இந்திரசித்தன் கூறியவற்றைக் கேட்டபின்பு) 'இராமன் இறக்கவில்லையோ?' என்று இராவணன் இசைத்தான் - என்று (மகனைப்பார்த்து) இராவணன் கேட்டான்; (அதற்கு); “துறந்து நீங்கினான்” - அவ்விராமன் போர்க்களத்தை விட்டு எங்கேயோ சென்று விட்டான்; அல்லனேல் - அங்ஙனம் செல்லாதிருந்திருப்பானாயின்; தம்பியைத் தொலைத்து - அவனுடைய தம்பியாகிய இலக்குவனை உயிர் நீங்கச் செய்து; சிறந்த நண்பரைக் கொன்று - அவனுக்குச் சிறந்த நண்பர்களாயிருந்தோரை எல்லாம் கொன்று; தன்சேனையைச் சிதைக்க - அவன்றன்னுடைய சேனையையும் சிதைத்த (பிரம்மாத்திரம்); மற்று அவன் திறம் - மற்று அவ்விராமன் பக்கத்தும்; மறந்து நிற்குமோ - (கொல்லாமல்) மறந்து நிற்பதுண்டோ? என்றான் மதலை - என்று மறுமொழி கூறினான்; மைந்தனாகிய இந்திரசித்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Then Irāmaṉ is not dead?" Irāvaṇaṉ asked.
- "He had left and gone away; otherwise — when it destroyed his brother,
- killed his chief friends and shattered his army —
- would its power have forgotten him and passed him by?" said the son.
What the poem says
Irāvaṇaṉ asks the obvious question: has Irāmaṉ survived? Intiracittu answers that Irāmaṉ must have left the battlefield.
Had he been there, the Brahmā weapon that killed his brother, his friends and his army would surely not have spared him.