கம்பராமாயணம் 8675 · யுத்த 21.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னதே என- (நீ கூறிய) அதுவே நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கூறி; அரக்கனும் ஆதரித்து அமைந்தான் - இராவணன் (தன்மகன் கூறியதை) உடன்பட்டு ஏற்றுக்கொண்டான்; சொன்ன மைந்தனும் - (நிகழ்ந்தவற்றைச்) சொன்ன இந்திர சித்தும்; தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான் - தனது பெரிய மாளிகையினை அடைந்தான்; மன்னன் ஏவலின் போயினன் - இராவணன் ஏவலால் முன்பு போருக்குச் சென்றவனாகிய; மகோதரன் வந்தான் - மகோதரனும் (மீண்டு தன் இருப்பிடத்திற்கு) வந்து சேர்ந்தான்; என்னை ஆளுடை நாயகன் - என்னை அடிமையாக உடைய இறைவனான இராமன்; வேறு இடத்து இருந்தான் - (தெய்வப்படைக்கலங்களுக்கு வழிபாடு செய்து கொண்டு) வேறோர் இடத்தில் தங்கி இருந்தான்.
“என்னை ஆளுடை நாயகன்” என்றவிடத்துக் கவிக்கூற்றாயிற்று. இதனால் கம்பர் இராமபிரானையே வழிபடு தெய்வமாகக் கொண்டிருக்கக்கூடுமெனச் கூற இடனாயிற்று. “என்னை ஆளுடையவன்' (கம்ப. 194) என் முன்னும் கவிக் கூற்றாக வந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "It must be so," said the rākṣasa, agreeing, and was content;
- the son who had spoken went off to his own great palace;
- Makōtaraṉ, who had gone at the king's command, came back;
- the Lord who rules me was in another place.
What the poem says
Irāvaṇaṉ accepts his son's explanation. Intiracittu goes back to his palace and Makōtaraṉ returns from the field.
Meanwhile Irāmaṉ has been elsewhere, worshipping his divine weapons. The poet calls him 'the Lord who rules me', speaking in his own voice. The commentary takes this as a sign that Kampaṉ himself worshipped Irāmaṉ as his chosen god.