கம்பராமாயணம் 8676 · யுத்த 21.189
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் -(வீரருள்) வீரனாகிய இராமபிரான்; செய்ய தாமரை நாள்மலர் - அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்ற, கைத்தலம் சேப்ப - (தனது) கைத்தலங்கள் மேலும் சிவக்கும்படி; துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் - தூய்மையும் தெய்வத்தன்மையும் உடைய உயர்ந்த (தனது) படைகளுக்கெல்லாம்; வரன்முறை துரக்கும் மெய்கொள் பூசனை - வரன்முறையாகச் செலுத்துதற்குரிய மெய்மையான வழி பாட்டினை; விதி முறை இயற்றி - செய்ய வேண்டிய முறைப்படி செய்து; மேல் - பிறகு, இனிமேல்; மொய்கொள் போர்க்களத்து - (வீரர்தம்) வலிமை விளங்கித் தோன்றும் போர்க்களத்திடத்து; எய்துவாம் என முயன்றான் - செல்வோம் என்று (புறப்படுதலாகிய) முயற்சியை மேற்கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Till his hands, like fresh red lotus blossoms, grew redder still,
- to all the pure, divine, celestial weapons he performed in due order
- the true worship to be offered according to rule; and then the hero
- made ready, saying, "Now let us go to the crowded field of battle."
What the poem says
Irāmaṉ finishes the formal worship of his divine weapons. He has offered so many flowers and done so many rites that his lotus-red hands have grown redder still.
Now he sets out for the battlefield, not yet knowing what has happened there.