கம்பராமாயணம் 8677 · யுத்த 21.190
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொள்ளியின் சுடர் அனலிதன் - தீக்கொள்ளியினை யொத்துச் சுடர் விட்டொளிர்கின்ற அக்கினி தேவனது; பகழிகைக் கொண்டான் - அம்பினைத் தன் கையிற் கொண்டவனாகி; அள்ளி நுங்கலாம் - (கையினால்) அள்ளியெடுத்து விழுங்குதற்குத் தக்கவாறு; ஆர் இருட் பிழம்பினை அழித்தான் - திரண்டுள்ள அரிய இருளின் பிழம்பினைச் சிதைத்து அழித்தான்; தள்ளில் தாமரைச் சேவடி - தள்ளப் படுதற்கியலாத (சிறந்த) தாமரை போன்ற சிவந்த திருவடி; நுடங்குறச் சார்ந்தான் - அசைவுற்றுத் தளர நடந்து சென்று; வெள்ள வெங்களப் பரப்பினை - (குருதி) வெள்ளம் நிரம்பிய கொடுமை மிக்க போர்க்களமாகிய பரந்த இடத்தினைப்; பொருக்கென விழித்தான் - திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.
தனக்கென ஒருவடிவில்லாத இருள் செறிவு மிகுதியால் கையினால் அள்ளி எடுத்து உட் கொள்ளத்தக்கவாறு தோன்றியதால், “அள்ளி நுங்கலாம் ஆரிருட் பிழம்பு” என்றார். தள்ளில் தாமரை - எவ்விதத்தும் குறை கூறித்தள்ளவியலாத தாமரை என்றவாறு, தான் விட்டுச்சென்ற பொழுது இருந்ததைப் போலல்லாமல் குருதி வெள்ளம் நிறைந்து கொடுமையாகக் காட்சியளித்ததால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took in hand the arrow of the Fire-god, blazing like a firebrand;
- he destroyed the dense mass of darkness, so thick one might scoop it up and swallow it;
- he stared, startled, at the wide expanse of the cruel field flooded with blood;
- and came on, his red lotus feet faltering.
What the poem says
The battlefield is still covered in a darkness so thick it seems solid enough to scoop up. Irāmaṉ dispels it with the fire god's arrow.
In the light he sees the field flooded with blood, unlike when he left it. He is shocked, and his feet falter as he walks onto the field.