கம்பராமாயணம் 8678 · யுத்த 21.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோக்கினான் - (அங்ஙனம் போர்க்களத்தை) விழித்துப் பார்த்தவனாகிய இராமபிரான்; பெருந்திசை தொறும் முறை முறை நோக்கி - திசையிடங்கள் தோறும் அடுத்தடுத்து உற்றுப்பார்த்து; ஊக்கினான் - (அங்குள்ள அவலக் காட்சிகளைக் கண்டு) முயன்று மேற்சென்றவனாய்; தடந்தாமரைத் திரு முகத்து - விரிந்த பெரிய செந்தாமரை மலர் போலும் (தன்) அழகிய முகத்தின் கண்ணே; உதிரம் போக்கினான் - உதிரத்தை வெளிப்படுத்தினான்; நிணப்பறந்தலை அழுவத்துள் புக்கான் - நிணம் நிறைந்த போர்க்களப் பரப்பினிடத்தே புகுந்தான்; காக்கும் வன் துணைத் தலைவரை - (தன் சேனையைக்) காத்தற்றொழிலை மேற்கொண்டிருந்த வலிமை வாய்ந்த துணையாயமைந்த (வானரத்) தலைவர்களை, தனித்தனி கண்டான் - (ஒவ்வொருவராகத் தனித்தனியே சென்று பார்த்தான்.
ஊக்குதல் - முயலுதல், முயன்று மேற் செல்லுதல். இராமபிரான் போர்க்களமெங்கும் தன் வீரர்கள் மாண்டு கிடத்தலைக் கண்டு முகம் வெளுத்துக் கண்களில் உதிரம் ஒழுக அவலமும் வெகுளியுமுடையனாய் வானர வீரர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சென்று கண்டு வருந்தியதுன்ப நிலையினை இச்செய்யுளும் அடுத்து வருவனவும் விரித்துரைக்கின்றன. எந்நிலையிலும் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து சித்திரத்தின் செந்தாமரை ஒத்திருக்கும் உள்ளத்தவனாகிய
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looked toward every great quarter, looking again and again;
- he forced himself on; from his broad lotus face
- he shed blood; he entered the expanse of that fat-strewn field;
- and saw, one by one, the strong comrade-chiefs who had guarded his army.
What the poem says
Irāmaṉ looks round in every direction, steadies himself and walks into the field, now slippery with fat and gore. He goes from one dead monkey leader to the next.
His grief and anger are so great that his eyes weep blood. The commentary notes that this verse begins a series in which Irāmaṉ, usually calm and beyond desire and aversion, mourns each comrade in turn.