கம்பராமாயணம் 8681 · யுத்த 21.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புகழோய் - புகழத்தக்க பெருமையுடையோனே! பிறந்த புன்மை செய் தொழில் - (என்னுடன்) தோன்றிய இழிந்த செய் தொழிலுக்குக் காரணமாகிய; என்வினைக்கொடுமையால் - எனது தீவினையின் கொடுமையால், முன்னைத் தேவர்தம் வரங்களும் - முன்பு (உனக்குத்) தேவர்கள் கொடுத்த வரங்களும்; முனிவர்தம் மொழியும் - முனிவர்கள் அளித்த வாழ்த்துரையும்; பின்னைச் சானகி உதவியும் - பின்பு (சனகன் மகளாகிய) சானகி (நீ இலங்கையில் அவளைக் கண்ட காலத்துச் செய்த உதவியும்; பிழைத்தன - ஆகிய இவையெல்லாம் (இன்று உன்னைக் காத்தற்கு முடியாதனவாய்) பயனற்றவாய் ஒழிந்தன; என்னைப் போல்பவர் ஒருவர் ஆர் உளர் - (இதற்குக்காரணமாய) என்னைப் போன்று (உயிர் தாங்கு) உள்ளவர் ஒருவர் (என்னையன்றிப் பிறர் யாருளர்? என்று இசைத்தான் - என்று (தன்னை வெறுத்துக்) கூறினான் (இராமன்).
தேவர்தம் வரங்களாவன; “உலகமுள்ளளவும் பெறுதி பெயராம் புகழ்” (உத்தர. அனுமப் - 34) என இந்திரனும். “என்வில்லார் கரத்திற் சத கூற்றில் ஒரு கூறுனக்கு மேவிடுக, எல்லா விஞ்சைகளும் தரிக்க இசைந்த சக்தியுண்டாக, நல்லாய் கொள் நீ தருகின்றேன், (உத்தர - அனுமப். 34) எனச் சூரியனும், 'இரணபூமியிடை நேர்ந்தால் என் பாசத்தால் மரணமில்லை உனக்கு' என வருணனும், “என் தண்டத்தால் முரணின் மிகு மாருதி ஆவி முடியா தொழிக' (உத்தர. அனும - 30) என இயமனும், “என்கதையால் நீ கூற்றின் சூழல் உறாய்' எனக்குபேரனும், 'என்கர மூவிலையினாலும் என்னாலும் மாருதி ஆவியகாலாதொழிக” (உத்தர - அனுமப் - 37) என ஈசனும், “என் பிரம தண்டால் தானும் சாவின்றி மேதாவியுமாய், ஒரு நாளும் விளியா நாளும் உறுக' எனப் பிரமதேவனும், 'தேவர்படையாற் செருக்களத்தில் வாதாமகன் சாவொழிக” (உத்தர - அனுமப் - 38) எனவானோர் தச்சனும் கொடுத்த வரங்கள் “வந்து நின்ற மறையோர் முனிவரருளாளர் ஆனோரெல்லாமனுமனுக்கழிவிலாத வரமளிப்ப (உத்தர - அனுமம் - 39) என முனிவர் ஆசி நல்கியமை ஆகியவற்றைக் காணலாகும். சீதையை அசோகவனத்தில்கண்டு இராமனது மணியாழியைப் பெற்றுத் துயர் தவிர்ந்த சீதை அனுமனை நோக்கி, மனமகிழ்ந்து அளித்துதவிய (கம்ப. 5299) இறவாமையாகிய பெருவரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The boons the gods gave long ago, the words of the sages,
- and after them Cāṉaki's gift — all have failed, because of the cruelty
- of my deeds, from which base acts are born; O glorious one!
- Who else is there, anywhere, like me?" he cried.
What the poem says
Aṉumaṉ was protected by many blessings. The gods gave him boons of long life and safety from their weapons, the sages blessed him, and Cītai, when he found her in the aśoka grove, gave him the gift of deathlessness. The commentary lists the boons from Indra, the Sun, Varuṇa, Yama, Kubera, Śiva and Brahmā as told in the Uttara Kāṇḍam.
Irāmaṉ blames himself for their failure. His own evil karma must be so strong that it has overcome every blessing, and he asks whether anyone could be as ill-fated as he is.