கம்பராமாயணம் 8684 · யுத்த 21.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விடைக்குலங்களின் நடுவண் - எருதுக் கூட்டங்களின் நடுவே; ஓர் விடை கிடந்தென்ன - ஒப்பற்ற தோர் இடபம் கிடந்தாற்போல (ப்பெருவீரர்களின் நடுவிலே கிடக்கும்); அங்கதக் களிற்றினை - அங்கதனாகிய யானையை; கடைக்கண் தீ உகக் கண்டான் - (இராமன் தன்) கண்களின் கடையினின்றும் தீப்பொறி பறக்குமாறு பார்த்தான்; படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் - (பகைவரால் துன்புறாது அடைந்தாரைப் பாதுகாக்கும் நோக்குடன்) ஆயுதங்களைச் சுமந்து கொண்டுள்ள தீவினையாளனாகிய யான்; பழி பார்த்து -பழி (நேராமல்) நோக்கி; அடைக்கலப் பொருள் காத்தவாறு - (என்னிடத்தில் ஒப்புவித்த) அடைக்கலப்பொருளைப் பாதுகாத்ததிறம்; அழகிது” என்று அழுதான் - மிகவும் அழகாயுள்ளது ' என்று கூறி அழுதான்.
அடைக்கலப்பொருள் அங்கதன். அவனை, இறக்கும் நிலையில் வாலி, “பொய்யுடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ... உன் கையடையாகும்” எனக் கூறி அடைக்கலமாகத் தந்தமை (கம்ப.4092) முன்பு காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a bull lying in the midst of herds of bulls,
- he saw the elephant-like Aṅkataṉ, sparks of fire falling from the corners of his eyes;
- "I, a wretch who carries weapons, watchful against blame —
- how finely I have guarded the one placed in my keeping!" he said, and wept.
What the poem says
Irāmaṉ finds Aṅkataṉ lying among the other dead warriors like a great bull among bulls. Fire comes from the corners of Irāmaṉ's eyes.
The dying Vālī had entrusted his son Aṅkataṉ to Irāmaṉ's protection. Irāmaṉ now mocks himself bitterly: he carries weapons in order to protect those who come to him, and this is how he has kept his trust.