கம்பராமாயணம் 8685 · யுத்த 21.198

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உடலிடைத் தொடர் பகழியின் ஒளிர்கதிர்க் கற்றை,
சுடருடைப் பெருங் குருதியில் பாம்பு என, சுமந்த
மிடல் உடை பணம் மீமிசை, தான், பண்டை வெள்ளைக்
கடலிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

உடரிடைத் தொடர் பகழியின் - உடம்பின் இடையே துளைத்து ஊடுருவிய அம்புகளின்; ஒளிர்கதிர்க் கற்றை - ஒளிவிட்டு விளங்கும் ஒளித் தொகுதியான; சுடருடைப் பெருங் குருதியில் - சுடரினையுடைய பெரிய குருதியினிடத்தே; பாம்பு எனச் சுமந்த - பாம்பெனப் பகருமாறு சுமந்து அக்காட்சி; மிடருடைப் பணம்மிசை - வலிமையை உடைய ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல்; பண்டை வெள்ளக் கடரிடை - பழமையான பாற்கடலின் கண்ணே; துயில்வான் தான் அன்ன - துயில்பவனாகிய தன்னை நிகர்த்திருக்க (க்கிடக்கும்); தம்பியைக் கண்டான் - இளவலான இலக்குவனை இராமபிரான் பார்த்தான்.

பணம் என்பது படத்தினை உடைய பாம்பினைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Amid the great blood, ablaze with the shining clusters of rays
  2. from the arrows that ran through his body, borne up as though on a serpent,
  3. upon a mighty hood — like himself, who in days of old
  4. sleeps on the flood of the sea — he saw his brother.

What the poem says

At last Irāmaṉ finds Ilakkuvaṉ. He lies in a pool of blood that glitters with light from the arrows in his body.

The scene recalls Viṣṇu, Irāmaṉ himself in his divine form, asleep on the serpent Ādiśeṣa in the Sea of Milk. Ilakkuvaṉ was traditionally held to be an incarnation of that serpent, which adds a further layer to the image.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭariṭait toṭar pakaḻiyiṉ oḷir katirk kaṟṟaic
cuṭaruṭaip peruṅ kurutiyil pāmpu eṉac cumanta
miṭaruṭaip paṇa mīmicai, tāṉ, paṇṭai veḷḷak
kaṭariṭait tuyilvāṉ aṉṉa tampiyaik kaṇṭāṉ.