கம்பராமாயணம் 8686 · யுத்த 21.199
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அகம் பொருமினான் - (இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் தம்பியைக் கண்ட இராமன்) மனம் வெதும்பினான்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான் - வெகுளி மிகுந்தவனாகி உயிர்ப்பு முழுமையும் புகையுடன் தோன்றப் பெற்றான்; குருமணித் திருமேனியும் - நிறந்தாங்கிய நீலமணி போலும் (தனது) அழகிய உடம்பும், மனம் எனக் குலைந்தான் - உள்ளம்போல நடுக்கமுற்றான்; தருமம் நின்று - அறக்கடவுள் (இத்துன்பநிலை கண்டு இரங்க) நின்று; தன்கண்புடைத்து அலமரச் சாய்ந்தான் - தன் கண்களில் அடித்துக் கொண்டு வருந்துமாறு (நிலத்தில்) சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது ஓர் - இடியினால் தாக்கப்பட்டதொரு; மராமரம் ஒத்தான் - மராமரத்தை ஒத்து (த்தரையில்) வீழ்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He choked within; he seethed; his whole life smouldered;
- his holy body, bright as a blue gem, shook as his heart did;
- he sank down, while Dharma itself stood beating its eyes in distress;
- he was like a marāmaram tree struck by a thunderbolt.
What the poem says
Seeing his brother lying in blood, Irāmaṉ is overwhelmed. His body trembles like his heart, and he collapses like a great tree struck by lightning.
The tree is a marāmaram, the kind of tree Irāmaṉ once pierced with a single arrow to prove his strength to Cukkirīvaṉ. Dharma, Righteousness personified, beats its eyes in grief to see him fall.